பக்கம் எண் :

577
 

தண்ணிய திருத்துருத்தியும், அன்றியும் அரைக்கண் இறுகக் கட்டுவது பாம்பு; இவற்றை முன்பே அறிந்தோமாயின், இவர்க்கு நாம் ஆட்படா தேயிருப்பேம். இவற்றை அறிந்தோமாயின், இவர்க்கு நாம் ஆட்படா தொழிவேமோ!

கு-ரை: "அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே" என்னும் இறுதித் தொடர்க்கு யாண்டும் இவ்வாறே இருபொருளுங் கொள்க. இதன்கண் உள்ள ஏகாரம் முதற் பொருட்குத் தேற்றமாயும், இரண்டாவது பொருட்கு எதிர் மறுக்கும் வினாவாயும் நிற்கும். முதற் பொருள் பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தும் குறிப்பையும், இரண்டாவது பொருள் அதனைச் செவ்வனே புலப்படுத்தும் வெளிப்படையினதாயும் நிற்கும். "மூப்பதுமில்லை" முதலிய மூன்றும் உலகத்தோடு ஒட்டாமையைக் குறிப்பனவாய் பழித்தல் போறற்கு உரியவாம். ‘வேள்விக்குடி’ என்பது ‘உழவு, வாணிபம் முதலியன செய்யுங்குடிகள் வாழும் ஊரன்று’ எனவும், ‘துருத்தி’ என்பது, ‘ஆற்றிடைக்குறை’ எனவும் பொருள் தந்து அவ்வாறு நிற்கும்; ஏனைய அவ்வாறாதல் வெளிப்படை. ‘மூப்பதும் இல்லை’ முதலிய மூன்றனுள் ஒன்றே அமைவதாக, ஏனையவற்றையும் மிகுத்தோதியது. பிறர் எல்லாரும் அவற்றை உடையராதலை வலியுறுத்தற்கு. சேர்ப்பு - சேர்ந்து வாழும் இடம்; அது, பகுதிப் பொருள் விகுதி. ‘காட்டகத்தது’ என்பது குறைந்து நின்றது. "காப்பது" என்பது தனித்தனி இயையும். "கோன்" என்றது, பன்மை ஒருமை மயக்கம். ‘தலைமேல் ஆர்ப்பது’ என்பதும் பாடம்.

‘பிறத்தல், பின்பு வளர்ந்து மூத்து இறத்தல் இவற்றையுடையோர் உயிர்த் தொகுதியுட் சேர்ந்தோர்’ என்பதும், ‘இவை இல்லாதவனே இறைவன்’ என்பதுமே, ‘இறைவன் யார்? உயிரினத்தவர் யாவர்? எனப் பிரித்தறிதற்குரிய வேறுபாடுகளாகும். ஆகவே, இத்திருப்பாடலிற் செம்பொருள் கொள்ளுங்கால், ‘பிறப்பிறப்பு இல்லாத இறைவர் இவரே என்பதை நன்கறிந்தோமாதலின், நாம் இவர்க்கு ஆட்படாதொழிதல் எவ்வாறு’ எனக் கொள்க. கொள்ளவே, இவருக்கு ஆட்படாதார், அவ்வாறொழிதற்குக் காரணம் அவரை மறைத்து நிற்கும் அறியாமையே’ என்பதும், அவ்வறியாமை நீங்கிய வழி, அணைமுரிந்த நீர் கடலிற் சென்று கலத்தற்கும், கயிறற்ற ஊசல் தரையைச் சார்தற்கும் யாதோர் இடையீடும் இல்லாமை போல இவர்க்கு ஆட்படுதற்கு யாதோர் இடையீடும் இல்லையாம்’ என்பதும் பெறப்படும். ‘சிவபிரானே இறைவன்’ என்பதனை இருபத்திரண்டு ஏதுக்கள் காட்டித் தெரிவிக்கப் புகுந்த அரதத்த சிவாசாரியாரும் "பிறப்பிறப்பாதி உயிர்க்குண மின்மையின்" என்னும் ஏதுவைக்