பக்கம் எண் :

578
 
179.கட்டக்காட் டின்னட மாடுவ

ரியாவர்க்கும் காட்சியொண்ணார்

சுட்டவெண் ணீறணிந் தாடுவர்

பாடுவர் தூயநெய்யால்

வட்டக்குண் டத்தில் எரிவளர்த்

தோம்பி மறைபயில்வார்

அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல்

நாம்இவர்க் காட்படோமே. 

2

180.பேருமோர் ஆயிரம் பேருடை

யார்பெண்ணோ டாணுமல்லர்

ஊரும தொற்றியூர் மற்றையூர்

பெற்றவா நாமறியோம்



கூறினமைஈண்டு நினைவு கூரற்பாலது. இங்ஙனமே, இத் திருப்பாடலிலும், வருகின்ற திருப்பாடலிலும் அருளப்பட்டவை சிவபிரானது இறைமைத் தன்மையைத் தெரிவிப்பனவாதல் அறிந்து கொள்க."எங்கோன்" என்றதை வருகின்ற திருப்பாடல்களிலும் இயைக்க.

2. பொ-ரை: எங்கள் தலைவர். இடரைத் தரும் காட்டிலே நடனம் ஆடுவார்; யாராலும் காண்பதற்கு அரியவர். சுடப்பட்ட வெள்ளிய சாம்பலைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாக ஆடல் பாடல்களைச் செய்வார்; வேதத்தைப் பலகாலும் பயில்கின்றவர்களாகிய அந்தணர்கள், வட்டமாகிய குழியில், தூயதாகிய நெய்யினால் எரியை வளர்த்துப் போற்றி, அதன்கண் பாகம் செய்த பொருள்களை ஏற்று உண்பார்; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!

கு-ரை: ‘முன்னாள் தக்கன் வேள்வித் தகர்தின்று (தி. 8 திருவா-திருச்சதகம் - 4) என்றருளியதனால், வேள்வியுள் ஊன் பாகம் பண்ணப்படுதல் இனிது பெறப்பட்டமையின், ‘அதனை உண்பார் இவர்‘ எனப் பழிப்பாயிற்று. "மறை பயில்வார் அட்டக்கொண்டு" என்றதனால், ‘வேதமுதல்வரும், வேள்வி முதல்வரும் ஆகியவர்’ என்பது அருளிய வாறாயிற்று. ‘அட்டக்கொண்டு’ என்புழிக் ககர ஒற்று, விரித்தல்.

3. பொ-ரை: எங்கள் தலைவர். பெயரும் தமக்குரியனவாக ஆயிரம் உடையவர்; இவர் பெண்ணும் அல்லர்; ஆணும் அல்லர்;