பக்கம் எண் :

579
 
காருங் கருங்கடல் நஞ்சமு

துண்டுகண் டங்கறுத்தார்க்

காரம்பாம் பாவ தறிந்தோமேல்

நாம் இவர்க் காட்படோமே. 

3

181.ஏனக்கொம் பும்மிள வாமையும்

பூண்டங்கோர் ஏறுமேறிக்

கானக்காட் டிற்றொண்டர் கண்டன

சொல்லியுங் காமுறவே

மானைத்தோல் ஒன்றுடுத் துப்புலித்

தோஒல் பியற்குமிட்டி

யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல்

நாம்இவர்க் காட்படோமே. 

4



இவர்க்கு ஊரும் ஒற்றிஊரே; அதுவன்றி வேறோர் ஊரை உடையராதலை நாம் அறிந்திலோம்; இருண்ட கரிய கடலி்ல் தோன்றிய நஞ்சினை உணவாக உண்டு. கண்டம் கறுப்பாயினார்; இவர்க்கு ஆரமாவது, பாம்பே; இவற்றையெல்லாம் அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!

கு-ரை: "பேருமோர் ஆயிரம் பேருடையார்" என்றது, ‘ஊரும் ஒற்றி’ என்றாற்போல, ‘பேரும் ஒன்றிலர்’ எனப் பழிப்பாயிற்று. உம்மை, எச்சம்.

4. பொ-ரை: எங்கள் தலைவர் பன்றியின் கொம்பையும், இளமையான ஆமையின் ஓட்டினையும் அணிந்து, ஒற்றை எருதின்மேல் ஏறுபவராய், தம்மை அடியார்கள் காட்டில் கண்ட கோலங்களையெல்லாம் பலபடியாக எடுத்துச் சொல்லிய பின்பும், விருப்பம் உண்டாக, மானினது அழகிய தோல் ஒன்றை அரையில் உடுத்து, தோளின் கண்ணும் புலித்தோலை இட்டு, உடம்பின் மேல் யானைத் தோலைப் போர்த்துக் கொள்பவர். இவற்றையெல்லாம் அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!

கு-ரை: திருமால் கூர்மமாக வடிவங்கொண்ட சிலநாளிலே அதனை அழித்தமையின் ‘இள ஆமை’ என்றார். "முற்றல் ஆமை" (தி.1 ப. 1 பா. 2) என்றது, செருக்கைக் குறித்ததென்க. "கானக்காடு" ஒருபொருட் பன்மொழி. ‘காமம் உற’ என்பது, குறைந்து நின்றது.