182. | ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர் | | ஊரிடு பிச்சையல்லால் | | பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர் | | ஏறியொர் பூதந்தம்பால் | | பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ | | றும்பல பாம்புபற்றி | | ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல் | | நாம்இவர்க் காட்படோமே. | | 5 |
183. | குறவனார் தம்மகள் தம்மக | | னார்மண வாட்டிகொல்லை | | மறவனா ராய்அங்கோர் பன்றிப்பின் | | போவது மாயங்கண்டீர் |
"மானினது ஐத்தோல்" என்க. ஐ சாரியை என்றலுமாம். சிவபிரானுக்கு மான்றோல் உண்மையும் திருமுறைகளில் சொல்லப்படுதல் காண்க. ‘புள்ளி உழை மானின் தோளான் கண்டாய்’ - அப்பர். 5. பொ-ரை: எங்கள் தலைவர் நாவிற்குச் சுவைகள் பலவற்றை ஊட்டி உண்பதற்கு, ஊரவர் இடுகின்ற பிச்சையையன்றி மற்றோர் உணவையும் இலர். ஒற்றை எருதைக் கயிற்றிற் கட்டி வைத்துக் கொண்டு, அதன் மேல் ஏறிச் செல்வர். சிறிய பூதங்கள் தம்மிடத்தில் பாட்டு ஈதலைக் கேட்டு நின்று இன்பம் நுகர்பவராவர். புற்றுக்கள் தோறும் சென்று பல பாம்புகளைப் பிடித்து ஆட்டிப் பிழைப்பர். இவற்றையெல்லாம் அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே! கு-ரை: "ஊட்டிக்கொண்டு" என்றதில், கொள், அடித்துக் கொண்டான் என்பதுபோல, தற்பொருட்டுப் பொருண்மை விகுதி. "ஓர் பூதம்" என்றதில், ‘ஒன்று’ என்பது சிறுமை குறித்து நின்றது, "பாட்டு" என்பதன்பின் வந்த, "ஈ" என்னும் முதனிலைத் தொழிற்பெயர், எதுகை நோக்கிக் குறுக்கலாயிற்று. தம் பெருமைக்கு ஏலாமை பற்றி, ‘கொடுத்தல்’ என்னாது "ஈதல்" என்றார். ‘பாடிக்கொண்டு’ என்பது விரித்தலாயிற்று என்றலுமாம். இப்பொருட்கு, உண்ணுதல் - பிழைத்தல்; உண்பவர் - பிழைத்தற்கு ஏதுவாய் உள்ளவர். ‘ஆட்டிக் கொண்டு’ என்பது, ஒரு சொல் நீர்மைத்து. 6. பொ-ரை: எங்கள் தலைவர்தம் புதல்வர்க்கு மனைவி, ஒரு குறவர் மகள்; இவரும் கொல்லும் தொழிலையுடைய வேடுவராய்
|