பக்கம் எண் :

581
 
இறைவனார் ஆதியார் சோதியா

ராய்அங்கோர் சோர்வுபடா

அறவனா ராவ தறிந்தோமேல்

நாம்இவர்க் காட்படோமே. 

6

184.பித்தரை ஒத்தொரு பெற்றியர்

நற்றவை என்னைப்பெற்ற

முற்றவை தம்மனை தந்தைக்குந்

தவ்வைக்குந் தம்பிரானார்

செத்தவர் தந்தலை யிற்பலி

கொள்வதே செல்வமாகி

அத்தவ மாவ தறிந்தோமேல்

நாம்இவர்க் காட்படோமே. 

7



முன்பு ஒரு பன்றிப்பின் சென்றார்; இவை மாயமாம். இவர் இப் பெற்றியரான இறைவரும், முன்னவரும், ஒளி வடிவினரும், அறவரும் ஆவதை அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!

கு-ரை: "மாயம்" என்றதற்கு, ‘வஞ்சனையாய்ப் பொருந்தாச் செயலாம்’ என்றும், ‘அருள் நாடகமாம்’ என்றும் இரு பொருளும் கொள்க.

7. பொ-ரை: என்னைப் பெற்ற நற்றாயும், வயது முதிர்ந்த அவள் தாயும், இவ் விருவர்க்கும் அன்னை, தந்தை, தமக்கை என்பவரும் ஆகிய எல்லோர்க்கும் இறைவராய் உள்ள இவர். பித்தரைப் போன்ற ஒரு தன்மை உடையராய் இருக்கின்றார்; அன்றியும், இறந்தவர் தலையோட்டில் பிச்சை ஏற்பதே செல்வமாக, அன்னதொரு தவமுடையராதலை அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!

கு-ரை: "அவ்வை" என்பன, ‘அவை‘ என இடைக்குறையாய் வந்தன. ‘நற்று அவை, முற்று அவை’ எனப் பிரிக்க. ‘அன்னை தந்தை’ என்பன பன்மை யொருமை மயக்கம். ‘அனை’ என்பதும் இடைக்குறை. தாய் வழியையே அருளியது, "எம்பரந்துபட்ட கிளைகள் பலவற்றிற்கும் இவரே இறைவர்’ என்பது உணர்த்தற்கு. "தவ்வை" என்றதற்கு, அவள் வாழ்க்கைப்பட்ட குடியையும், ஏனையோர்க்கும் அவர் பிறந்த குடியையும் கொள்க. இவர் வழியை எல்லாம் கூறவே, தம் வழிக்கு இறைவராதல் சொல்லவேண்டாவாயிற்று. "ஆகி" என்றது,