பக்கம் எண் :

582
 
185.உம்பரான் ஊழியான் ஆழியான்

ஓங்கி மலர் உறைவான்

தம்பர மல்லவர் சிந்திப்

பவர்தடு மாற்றறுப்பார்

எம்பர மல்லவர் என்னெஞ்சத்

துள்ளும் இருப்பதாகி

அம்பர மாவ தறிந்தோமேல்

நாம்இவர்க் காட்படோமே.

8

186.இந்திர னுக்கும் இராவண

னுக்கும் அருள்புரிந்தார்

மந்திரம் ஓதுவர் மாமறை

பாடுவர் மான்மறியர்

சிந்துரக் கண்ணனும் நான்முக

னும்முட னாய்த்தனியே

அந்தரஞ் செல்வ தறிந்தோமேல்

நாம்இவர்க் காட்படோமே. 

9



உடைமையின் வினை உடையதன்மேல் நின்றவாறு. ‘செல்வமாகில்‘ என்பது பிழைபட்ட பாடம். "தவம்" என்றதற்கு, பழிப்புப் பொருளில், ‘தவப்பயன்’ என்றும், புகழ்ச்சிப் பொருளில், ‘தவக் கோலம்’ என்றும் கொள்க.

8. பொ-ரை: ‘இந்திரன், உருத்திரன், மால், அயன், என்னும் இவர்கள் அளவில் உள்ளரல்லர் என்றும், ‘தம்மை நினைப்பவரது மனக்கவலையைப் போக்குபவர் எம்மளவல்லவர்’ என்றும் சொல்லப்படுகின்ற இவர், என் மனத்திலும் இருத்தலுடையவராய் வேறு வெளியாதலை அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!

கு-ரை: ‘இருப்பதாகில்’ என்பது பிழைபட்ட பாடம். "அம்பரம்" என்றதற்கு. ‘அருவப்பொருள்’ எனவும், ’பரவெளி’ எனவும் இருபொருள் கொள்க.

9. பொ-ரை: எங்கள் தலைவர் தேவர் கோமானாகிய இந்திரனுக்கும், அரக்கர் கோமானாகிய இராவணனுக்கும் அருள் புரிந்தார். அந்தணர்க்குரிய மந்திரம் ஓதுதல், மறைபாடுதல்