பக்கம் எண் :

583
 
187.கூடலர் மன்னன் குலநாவ

லூர்க்கோன் நலத்தமிழைப்

பாடவல் லபர மன்னடி

யார்க்கடி மைவழுவா

நாடவல் லதொண்டன் ஆரூரன்

ஆட்படு மாறுசொல்லிப்

பாடவல் லார்பர லோகத்

திருப்பது பண்டமன்றே.

10

திருச்சிற்றம்பலம்

என்பவற்றையும், வேடர்க்குரிய மான் கன்றைப் பிடித்தலையும் உடையவர். ‘மால், அயன்’ என்னும் இருவரும் உடனாயிருப்ப, அவரொடு நிற்றலேயன்றி, தாம் மட்டும் தனியே உயர்ந்தும் செல்வர். இவற்றையெல்லாம் அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!

கு-ரை: இவை அனைத்தும், பழிப்பும் புகழும் ஆதல் அறிந்து கொள்க.

10. பொ-ரை: பகைவர்க்கு அவர் வணங்கும் அரசனும், மேன்மை பொருந்திய திருநாவலூர்க்குத் தலைவனும், நன்மையையுடைய தமிழைப் பாடவல்ல சிவனடியார்க்கு அடிமை வழுவாது செய்யுமாற்றால் அப்பெருமானை அடைய எண்ணுகின்றவனும் ஆகிய நம்பியாரூரன், தன் தலைவனுக்கு ஆட்படுதல் இவ்வாறெனச் சொல்லி இப்பதிகத்தைப் பாடவல்லவர், மேலான உலகத்தில் சென்று தங்குதல் பொருளன்று. (மிக எளிதாம்)

கு-ரை: நரசிங்கமுனையரையர்க்கு மகன்மையுற்றமைபற்றி "கூடலர் மன்னன்" என்று அருளினார். "வழுவாது" என்பது, ஈறுகெட்டு நின்றது. ‘ஆட்படுமாறு’ என்றது, ‘இன்ன தன்மையுடையார்க்கு ஆட்படோம்’ என்றும், ‘இன்ன தன்மையுடையார்க்கு ஆட்படுவோம்’ என்றும் இருபொருளும் அருளிப்போந்தமையை.