பக்கம் எண் :

58
 

அன்றி, ஒன்றிரண்டு இடங்களில் இறைவனை வைது பாடியதையும் காண்கின்றோம், "மகத்தில் புக்கதோர் சனி எனக்கானாய்", (தி. 7 ப. 54 பா. 9) "மற்றைக்கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்து போதீரே" (தி. 7 ப. 95 பா. 2) என்பன அதற்கு எடுத்துக்காட்டாகும்.

நாயனார் இறைவரை வற்புறுத்திப் பொன்பெற்ற இடங்கள் பல. அவை நிற்க. திருமுதுகுன்றத்தில் இறைவர் கொடுத்த பொன்னை எடுத்துக் கொண்டு போகவும் மறுத்து, அதனை மணிமுத்தாற்றில் இட்டு, 'இது திருவாரூர்க் குளத்தில் வந்து சேர வேண்டும்' என்று சொல்லிச் சென்று, அங்ஙனமே திருவாரூர்க் குளத்தில் வரப்பெற்றார். பெற்றதனோடு அமையாமல் அதனை மாற்றுரைத்தும் பார்த்தார்.

திருக்கோளிலி இறைவன் குண்டையூரில் நெல் கொடுக்க, அதனை எடுத்து வந்து சேர்க்க ஆள் தருக என்றும் பாடி, அங்ஙனமே தரப் பெற்றார். இவையெல்லாம் அவரது தோழமை உரிமையை எவ்வளவு தெளிவாக நமக்குப் புலப்படுத்துகின்றன!

இவைகளையெல்லாம் நோக்கின், நாயனார் இறைவர் தமக்குச் செய்த திருவருட் பெருமையால் பெரிதும் தருக்கிநின்றார் போலத் தோன்றும். ஏனெனில், நாயனாரது நிலையை நம்மனோர் அறிதல் எளிதன்று. ஏன், அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய கலிக்காமரே அவரது நிலையை மாறுபட உணர்ந்தார் என்றால், நாம் எவ்விடத்தோம்! வன்றொண்டர், இறைவனைப் பரவையார்பால் தூதுவிடுத்தது கேட்டு, ஏயர்கோன் கலிக்காமநாயனார்,

"நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால
ஏயும்என்று இதனைச் செய்வான் தொண்டனாம்! என்னேபாவம்!"

(தி. 12 ஏயர். பா. 384)

"அரிவைகா ரணத்தி னாலே ஆளுடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக ஏவிஅங் கிருந்தான் தன்னை
வரவெதிர் காண்பே னாகில் வருவதுஎன் னாங்கொல்!"

(தி. 12 ஏயர். பா. 387)

என்று பெரிதும் வெகுண்டார் என்று அறிகின்றோம். நாயனார் இறைவனை ஏவவே இல்லை; இது முக்காலும் உண்மை. தமது உயிர் உடம்பின் அகத்ததோ, புறத்ததோ என்று எண்ணும்படி ஊசலாடிக்