பக்கம் எண் :

59
 

கொண்டிருக்கும் நிலையில், இறைவரை உற்றுழி உதவப் பெரிதும் குறையிரந்து வேண்டினார். அவராலன்றிப் பிறர் ஒருவராலும் அக்குறை முடித்தல் கூடாமையாலே வேண்டினார். இறைவரும் தாம் அக்குறையை முடியாதுவிடின், நாயனார் உயிர் உய்யாது என்பதை உணர்ந்தே தூது சென்றார்.

ஆனால், இறைவர் தாமே இதற்குத் தூதாகச் செல்ல வேண்டுவது இல்லை; வேறுவகையிலும் பரவையாரது ஊடலைத் தீர்த்தல் கூடும்; ஆயினும், தாம் தம் மெய்யடியார்க்கு எத்துணை எளியராகின்றார் என்பதையும், தாம் தம் அடியவர்க்கு இருமையும் பயத்தலையும் உலகிற்கு இனிது விளக்கவே, தாமே தூதாகச் சென்றார்' இஃது அவர் ஒரு முறையிலே அச்செயலை முடியாது, இரு முறை சென்றமையானே விளங்கும். இதனை, நால்வர் நான்மணி மாலை ஆசிரியர், பாடல் 15இல்,

'நோக்குறும் நுதலோன் நின்னிடை விருப்பால்

நூற்பக வன்னநுண் மருங்குல்

வார்க்குவி முலைமென் மகளிர்தம் புலவி

மாற்றுவான் சென்றனன் என்றால்

கோக்கலிக் காமன் வயிற்றிடைக் குத்திக்

கொண்டதே துக்குநீ புகலாய்"

என்று குறித்துக் காட்டுகின்றார். இறைவர் நாயனாருக்குத் தூது சென்றதனால் அவரது எளிவந்த தன்மையையே பெரியோர் உணர்கின்றனர் என்பதற்கு,

வேதன் நாரணன் ஆர ணம்அறி

யாவி ழுப்பொருள் பேதைபால்

தூத னாய்இரு கால்ந டந்திடு

தோழன் வன்மைசெய் தொண்டனுக்கு

ஆத லால்அடி யார்க ளுக்கெளி

யான் அடிக்கம லங்கள்நீ

காத லால் அணை ஈண்டன் வேண்டிய

இம்மை யேதரும் கண்டிடே.

-சிவஞானசித்தி., பரபக். 46

என்னும் திருவிருத்தமே சான்றாகும், இதனால், நாயனார் இறைவர் தமக்குத் தந்த பேருரிமையால் தருக்கியிருந்தார் என மனத்தால்