பக்கம் எண் :

602
 
210.ஆட்டான் பட்டமையால் அடி

யார்க்குத் தொண்டுபட்டுக்

கேட்டேன் கேட்பதெல்லாம் பிற

வாமை கேட்டொழிந்தேன்

சேட்டார் மாளிகைசூழ் திரு

மேற்ற ளிஉறையும்

மாட்டே யுன்னையல்லால் மகிழ்ந்

தேத்த மாட்டேனே.

2

 


"இனி ஏத்த மாட்டேனே" என்றது, 'அந்நிலையில் திட்பம் எய்தப் பெற்றேன்' என்றபடி. ஏகாரம், தேற்றம், அதனை எய்தியவாற்றை விளக்குவார், "வந்தாய் போயறியாய்" என்று அருளினார். " நுனையே நினைந்திருந்தேன்" என்றமையால், முன்னரும் சுவாமிகள் அவ்வாறிருந்தமை பெறப்பட்டது. தளி, கோயில். மேற்குப் பக்கத்தில், இருத்தலால் 'மேற்றளி' எனப்பட்டது.

2. பொ-ரை: பெருமையையுடைய பல மாளிகைகள் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் செல்வமாய் உள்ளவனே, அடியேன் உனக்கு அடிமையாயினமையால், உன் அடியார்க்கு அடியனாகின்ற பேற்றைப் பெற்றேன். அதனால், உன்பால் அடியேன் வேண்டற்பாலன பலவற்றையும் வேண்டி, இறுதியாகப் பிறவாத நிலையை வேண்டியொழிந்தேன். இனி, என் மகிழ்ச்சி மீதூர்வால் உன்னைப் புகழ்தலன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன்.

கு-ரை: "ஆள்தான்" என்பதில் உள்ள 'தான்', அசைநிலை, "பட்டு" என்றதும், 'பட்டமையால்' என்றபடியாம். இறைவனுக்கு ஆட்பட்ட பின்னரே அத்தகையோராய அடியவரை அணுகுதல் கூடும் ஆகலின், 'உனக்கு ஆட்பட்டமையால் உன் அடியார்க்குத் தொண்டு பட்டேன்' என்றும், அடியார்க்கு அடியராய பின்னரே அடிமை நிரம்புதலாலும், அது நிரம்பப்பெற்றவர் யாதொன்றனையும் பிறர்பால் சென்று இரத்தல் இன்மையானும், "கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்" என்றும் அருளினார். 'உனக்கு, உன்' என்பன சொல்லெச்சங்கள். "கேட்பது" என்பது. பன்மையொருமை மயக்கம்; 'கேட்பவெல்லாம்' என்பதே பாடம் எனலுமாம். "ஒழிந்தேன்" என்பது, 'விட்டேன்' என்பதுபோல, துணிவுப் பொருளதாய், ஒருசொல் நீர்மைப்பட்டு நின்றது. 'சேடு மாடு' என்பன, எதுகை நோக்கி விரித்தல் பெற்று நின்றன. இனி, 'மாட்டு' என்பது முதனிலைத் தொழிற் பெயராய், 'வல்லுதல்' எனப் பொருள்தந்து, அஃது, அதனைத்