பக்கம் எண் :

603
 
211.மோறாந் தோரொருகால் நினை

யாதி ருந்தாலும

வேறா வந்தென்னுள்ளம் புக

வல்ல மெய்ப்பொருளே

சேறார் தண்கழனித் திரு

மேற்ற ளியுறையும்

ஏறே யுன்னையல்லால் இனி

ஏத்த மாட்டேனே.

3

 

212.உற்றார் சுற்றமெனும் மது

விட்டு நுன்னடைந்தேன்

எற்றால் என்குறைவென் இட

ரைத்து றந்தொழிந்தேன்.


தரும் இறைவனுக்கு ஆயிற்று என்று உரைப்பினும் ஆம்.

3. பொ-ரை: அடியேன் ஓரொருகால் மயக்கம் உற்று உன்னை நினையாதிருப்பினும், நீதானே வந்து என் உள்ளத்தில் புகுந்து நினைப்பிக்கவல்ல உண்மைப் பொருளானவனே. சேறு நிறைந்த குளிர்ந்த கழனிகளையுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற ஆண் சிங்கம் போல்பவனே. இனி, அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன்.

கு-ரை: 'மாழாந்து' என்பதுபோல, 'மோறாந்து' என்பது ஒரு சொல் என்பது, ஈண்டு அறியப்படுகின்றது. "தனியாக" எனப்பொருள்படும், 'வேறாக' என்பது, இங்கு, 'தானே' என்னும் பொருளதாய் நின்றது. இறைவன் தானே வலிய வந்து தமக்குத் தன்னைக் காட்டி நின்றமையை, ஓலை காட்டி ஆண்டமை, திருவடி சூட்டி ஆண்டமை முதலியவற்றால் நன்கறிந்தாராதலின், இவ்வாறு அருளிச்செய்தார். இதனானே, இவைபோலும் நிகழ்ச்சிகள் பிறவும் சுந்தரர் பால் நிகழ்ந்தமை பெறுதும். உள்ளத்தில் இவ்வாறு புகுவன பிறவும் உளவேனும், அவையெல்லாம் பின்னர் நிலையாது நீங்குதலின், அவ்வாறில்லாது என்றும் நீங்காது நிற்கும் இறைவனை, "மெய்ப்பொருள்" என்று அருளினார். "வந்தாய் போயறியாய்" என முதற்கண் அருளிச் செய்ததும் இவ்வாற்றான் என்க.

4. பொ-ரை: மூன்று மதில்களையும் அழித்தவனே, கச்சித் திரு