| செற்றாய் மும்மதிலுந் திரு | | மேற்ற ளிஉறையும் | | பற்றே நுன்னையல்லால் பணிந் | | தேத்த மாட்டேனே. | | 4 |
213. | எம்மான் எம்மனையென் றவர் | | இட்டி றந்தொழிந்தார் | | மெய்ம்மா லாயினதீர்த் தருள் | | செய்யும் மெய்ப்பொருளே | | கைம்மா ஈருரியாய் கன | | மேற்ற ளிஉறையும் | | பெம்மான் உன்னையல்லால் பெரி | | தேத்த மாட்டேனே. | | 5 |
மேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற துணையானவனே, அடியேன், என்னோடு நெருங்கிய உறவினர் பலர் உளர் என்றும், மற்றும் சுற்றத்தார் பலர் உளர் என்றும் நினைத்து, அவர்கள் தொடர்பிலே பட்டு, உய்ந்து போகமாட்டாது நிற்கின்ற அந்நிலையைத் துறந்து, உன்னையே புகலிடமாக அடைந்தேன். அதனால், இப்பொழுது, எத்தன்மையதான பொருளால், என்ன குறை அடியேனுக்கு இருக்கின்றது? ஒன்றும் இல்லை. என் துன்பங்களையெல்லாம் அடியோடு நீக்கிவிட்டேன். ஆதலின் இனி, உன்னையன்றிப் பிறரைப் பணிந்து புகழ்தலைச் செய்யவே மாட்டேன். கு-ரை: உற்றார், ஒன்றாய் இயைந்தவர்; அவர் மனைவியும் மக்களும் சுற்றம் சூழ்ந்தவர்; அவர், ஏனையோர் மனைவியும், மக்களும் தாமே யன்றித் தம்மைச் சார்ந்தவராலும் பந்தம் உறுவிப்பர் என்பார், இங்ஙனம் வகுத்தோதியருளினார்; "சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான்" என்றார், மாணிக்கவாசகரும் (தி. 8 திருவம்மானை 20.) நுன் என்பது பற்றி, முதல் திருப்பாடற் குறிப்பிலே கூறப்பட்டது. 5. பொ-ரை: உடம்பு இடமாக வருகின்ற மயக்கமாயினவற்றை எல்லாம் நீக்கி, மெய்யுணர்வைத் தந்தருளுகின்ற மெய்ப்பொருளாய் உள்ளவனே, யானையை உரித்த தோலை உடையவனே, பெருமை பொருந்திய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற பெரியோனே,
|