பக்கம் எண் :

605
 
214.நானேல் உன்னடியே நினைந்

தேன்நி னைதலுமே

ஊனேர் இவ்வுடலம் புகுந்

தாய்என் ஒண்சுடரே

தேனே இன்னமுதே திரு

மேற்ற ளிஉறையும்

கோனே உன்னையல்லாற் குளிர்ந்

தேத்த மாட்டேனே.

6

 


என்னைத் தாங்குகின்ற. 'என் தந்தை' என்றும், 'என் தாய்' என்றும் சொல்லப்பட்டவர்கள் என்னை இங்குத் தனியே வைத்து விட்டு இறந்துவிட்டார்கள்; ஆகவே, இனி, உன்னையன்றிப் பிறரை நான் பெரிய பொருளாக நினைத்துப் புகழவேமாட்டேன்.

கு-ரை: துணையாவார் என்று துணியப்படுகின்றவருள் ஒருவரேனும் எஞ்ஞான்றும் எங்கும் உடனாய் நிற்பார், இல்லை என்றற்கு அவருள் மேம்பட்டவராகிய தந்தை தாயரை எடுத்துக்காட்டியருளினார். ஆகவே, "இறந்தொழிந்தார்" என்றதன்பின், 'இனி யாவர் தாம் என்னைத் தாங்குவார்! ஆதலின்' என்பது, இசையெச்சமாய் வந்து இயையுமாறு அறிக.

'நமக்குத் துணை தந்தை' யென்றும், 'தாய்' என்றும், மயங்குகின்ற மயக்கங்கள் எல்லாம் உடம்பு காரணமாக வாதலின், "மெய்ம்மால் ஆயின" என்று அருளிச் செய்தார். "பெரிது" என்றதன்பின், 'ஆக நினைத்து' என்னும் சொல்லெச்சம் வருவிக்க.

6. பொ-ரை: எனது ஒளி பொருந்திய விளக்குப் போன்றவனே, தேன் போன்றவனே, இனிய அமுதம் போன்றவனே, கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, நானோ எனில், உன் திருவடியை அடைய நினைத்தேன்; அங்ஙனம் நினைத்த அளவிலே நீ ஊன் பொருந்திய இவ்வுடலுள்ளே வந்து புகுந்துவிட்டாய்; ஆதலின், இத்தகைய பேரருளாளனாகிய உன்னையல்லது பிறரை அடியேன் உளங்குளிர்ந்து புகழவேமாட்டேன்.

கு-ரை: 'வேண்டுவார் வேண்டுவதை ஈயும் பேரருளும், பேராற்றலும் உடைய பதியாகிய உனது பெருமையை அறிந்தேனாதலின், அவை இல்லாத சிறுமையுடைய பசுக்களாகிய பிறரை யான் அடையேன்' என்றபடி.