216. | விரையார் கொன்றையினாய் விம | | லாஇனி உன்னையல்லால் | | உரையேன் நாவதனால் உட | | லில்உயிர் உள்ளளவும் | | திரையார் தண்கழனித் திரு | | மேற்ற ளிஉறையும் | | அரையா உன்னையல்லால் அறிந் | | தேத்த மாட்டேனே. | | 8 |
217. | நிலையா நின்னடியே நினைந் | | தேன்நி னைதலுமே | | தலைவா நின்னினையப் பணித் | | தாய்ச லமொழிந்தேன் | | சிலையார் மாமதில்சூழ் திரு | | மேற்ற ளிஉறையும் | | மலையே உன்னையல்லால் மகிழ்ந் | | தேத்த மாட்டேனே. | | 9 |
8. பொ-ரை: நறுமணம் பொருந்திய கொன்றைமாலையை உடையவனே. தூயவனே, அலைகள் நிறைந்த குளிர்ந்த கழனிகளையுடைய கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, அடியேன். என் உடலில் உயிர் உள்ளவரையிலும் இனி, உன்னையன்றிப் பிறரை, 'தேவர்' என்று என் நாவினாற் சொல்லவும் மாட்டேன்; உன்னையன்றிப் பிறரை உயர்ந்தவராக மதித்துப் புகழவும் மாட்டேன்; இது திண்ணம். கு-ரை: 'ஏத்தல்' என்பது பின்னர் வருகின்றமையின், முன்னர் வந்த உரைத்தல், ஒருசொற் சொல்லலாயிற்று. ஆகவே, அதற்கு இவ்வாறுரைத்தல் பெறப்பட்டது. வலியுறுத்தற் பொருட்டு, "உன்னையல்லால்" என்பதனைப் பின்னுங் கூறினார். முன்னர், "நாவதனால்" என, வேண்டா கூறியதும் அன்னது. 9. பொ-ரை: சந்திர காந்தக் கற்கள் நிறைந்த பெரிய மதில் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற மலைபோன்றவனே. தலைவனே, அடியேன், உனது திருவடியையே நிலைத்த பொருளாக உணர்ந்தேன்; அவ்வாறு உணர்ந்த அளவிலே அவ்வாறே
|