பக்கம் எண் :

608
 
218.பாரூர் பல்லவனூர் மதிற்

காஞ்சி மாநகர்வாய்ச்

சீரூ ரும்புறவிற் றிரு

மேற்ற ளிச்சிவனை

ஆரூ ரன்னடியான் அடித்

தொண்டன்ஆ ரூரன்சொன்ன

சீரூர் பாடல்வல்லார் சிவ

லோகஞ் சேர்வாரே.

10

திருச்சிற்றம்பலம்


மாறாது என்றும் உன்னையே உணர்ந்து நிற்குமாறு எனக்கு உன் திருவருளைச் செய்தாய்; அதனால், அடியேன், என், துன்பமெல்லாம் ஒழிந்தவனாயினேன்; ஆகவே, இனி அடியேன், உன்னையன்றிப் பிறரை, மனம் மகிழ்ந்து புகழவேமாட்டேன்.

கு-ரை: 'நின்னையே' என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. "சிலை" என்பது, விதப்பினால், உயர்ந்ததன் மேலதாயிற்று.

10. பொ-ரை: நிலம் முழுதும் ஆணை செல்கின்ற பல்லவனது அரசிருக்கை ஊராகிய, மதிலை உடைய காஞ்சி மாநகரின்கண் சிறப்புப் பொருந்திய இடத்தில் விளங்கும் திரு மேற்றளியின்கண் உள்ள சிவபெருமானை, திருவாரூர்ப் பெருமானுக்கு அடியவனான அணுக்கத் தொண்டனாம் நம்பியாரூரன் பாடிய, தாள அறுதி பொருந்திய இப் பாடல்களைப் பாடவல்லவர், சிவலோகத்தை அடைவார்கள்.

கு-ரை: தடுத்தாட்கொண்டது திருவெண்ணெய்நல்லூரிலாயினும், 'வருக' என்று பணித்து மணம்புரிவித்து இருக்கச்செய்ததும், அடியார்க்கு அடிமையாகச் செய்ததும் திருவாரூரிலாதலின், நாயனார், தம்மை, "ஆரூரன் அடியான்" என்று அருளினார்.