பக்கம் எண் :

610
 
220.அண்ட கபாலஞ்சென்னி அடி

மேல்அலர் இட்டுநல்ல

தொண்டங் கடிபரவித் தொழு

தேத்திநின் றாடுமிடம்

வெண்டிங்கள் வெண்மழுவன் விரை

யார்கதிர் மூவிலைய

பண்டங்கன் மேயவிடம் பழ

மண்ணிப் படிக்கரையே.

2

 

221.ஆடுமின் அன்புடையீர் அடிக்

காட்பட்ட தூளிகொண்டு

சூடுமின் தொண்டருள்ளீர் உம

ரோடெமர் சூழவந்து



2. பொ-ரை: திரண்ட தலையை அணிந்த முடியினையுடைய சிவபிரானது திருவடிகளில் நல்ல அடியார்கள் மலர்களை இட்டு அவ்வடிகளை வணங்கி, முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து ஆடுகின்றதும், வெண்மையான பிறையை அணிந்தவனும், வெள்ளிய மழுவை ஏந்தியவனும், பகைவர்மேல் விரைதல் பொருந்திய, ஒளியையுடைய மூவிலை வேலை (சூலத்தை) உடைய, 'பண்டரங்கம்' என்னும் கூத்தினை உடையவனும் ஆகிய அப்பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கின்றதும் ஆகிய இடம் 'திருப்பழமண்ணிப் படிக்கரை' என்னும் தலமே.

கு-ரை: "அண்டம்" என்றது திரட்சியையும், "கபாலம்" என்றது தலையையும் குறித்தது. 'சென்னி, தொண்டு' என்பன ஆகுபெயராய் அவற்றை உடையவரைக் குறித்தன. 'அவ்வடி' எனவும், 'அப்பண்டங்கன்' எனவும் சுட்டுக்கள் வருவித்து உரைக்க. பரவுதல் முன்னிலையாகவும், ஏத்துதல் படர்க்கையாகவும் துதித்தல் என்க. மழுவிற்கு வெண்மை, கூர்மையால் உண்டாவதாம். மூவிலை அன்மொழித்தொகை. 'பண்டரங்கம்' ஒருவகைக் கூத்து; "நீ பண்டரங்கம் ஆடுங்கால்" (கலி - கடவுள் வாழ்த்து) அதனை உடையவன் பண்டரங்கன். அஃது இடைக் குறைந்து, 'பண்டங்கன்' என நின்றது.

3. பொ-ரை: அன்புடையவர்களே, அன்புக் கூத்தினை ஆடுங்கள்; தொண்டராய் உள்ளவர்களே, சிவபெருமானது திருவடிக்கு