| வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந் | | தாமல் திருந்தச்சென்று | | பாடுமின் பத்தருள்ளீர் பழ | | மண்ணிப் படிக்கரையே. | | 3 |
222. | அடுதலை யேபுரிந்தான் அவை | | அந்தர மூவெயிலும் | | கெடுதலை யேபுரிந்தான் கிள | | ருஞ்சிலை நாணியிற்கோல் | | நடுதலை யேபுரிந்தான் நரி | | கான்றிட்ட எச்சில் வெள்ளைப் | | படுதலை யேபுரிந்தான் பழ | | மண்ணிப் படிக்கரையே. | | 4 |
ஆட்பட்டவர்களது அடியில் உள்ள பொடியை எடுத்துத் தலைமேல் சூடிக்கொள்ளுங்கள்; பத்தராய் உள்ளவர்களே, உம்மவரோடு எம்மவரும் சூழ ஒன்று கூடி, மனம் மெலிதற்குக் காரணமான இல்வாழ்க்கையில் கிடந்து வருந்தாமல் நன்கு சென்று, திருப்பழமண்ணிப் படிக்கரையைப் பாடுங்கள். கு-ரை: உடையாரது ஆட்பட்ட தன்மையை உடைமைமேல் ஏற்றி, "ஆட்பட்ட தூளி" என்றார். "வாழ்க்கை தன்னை" என்றது வேற்றுமை மயக்கம். 4. பொ-ரை: உலகத் தொகுதியை அழித்தலை விரும்பினவனும், வானத்தில் திரிந்த மூன்று மதில்கள் கெட்டொழிதலை விரும்பி வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும், நரி உமிழ்ந்த எச்சிலாகிய, வெண்மையான, அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம், 'திருப்பழமண்ணிப் படிக்கரை' என்னும் தலமே. கு-ரை: "கெடுதலையே புரிந்தான்" என்பதில் உள்ள புரிந்தான், முற்றெச்சம். 'நரி கான்றிட்ட எச்சில்' என்பது இன அடை.
|