பக்கம் எண் :

613
 
225.கடுத்தவன் தேர்கொண்டோடிக் கயி

லாயநன் மாமலையை

எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்

கன்முடி பத்தலற

விடுத்தவன் கைநரம்பால் வேத

கீதங்கள் பாடலுறப்

படுத்தவன் பால்வெண்ணீற்றன் பழ

மண்ணிப் படிக்கரையே.

7

226.திரிவன மும்மதிலும் மெரித்

தான்இமை யோர்பெருமான்

அரியவன் அட்டபுட்பம் மவை

கொண்டடி போற்றிநல்ல


கு-ரை: 'மதில்' என்றது திரிபுரத்தை. 'செம்புனஞ்சேர்' என்றது இன அடை. 'வெள்ளை எருது' என்பது ஒருசொல் தன்மைத்தாய், "ஏறு" என்பதனைப் பொதுமை நீக்கிச் சிறப்பித்தது, 'இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்' (தொல். சொல். 159) என்றாற்போல. "ஏற்றையும்" என்னும் உம்மை மாற்றி உரைக்கப்பட்டது.

7. பொ-ரை: அரக்கனும், தேரைச் செலுத்திக்கொண்டு சென்று, அதனைத் தடுத்தலால் சினங்கொண்டவனாய்க் கயிலாயமாகிய நல்ல பெரிய மலையை எடுத்தவனும் ஆகிய இராவணனது பத்து வாய்களும் பத்துத் தலைகளில் பொருந்தியிருந்து அலறும்படி ஆக்கியவனும், பின்பு அவன் கை நரம்பாகிய வீணையால் வேதத்தொடு கூடிய இசைகளைப் பாட, அவனை நலத்திற் பொருந்தச் செய்தவனும், பால் போலும் வெள்ளிய திருநீற்றை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது, 'திருப்பழமண்ணிப்படிக்கரை' என்னும் தலமே.

கு-ரை: 'அதனைத் தடுத்தலால்' என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. "அலற விடுத்தவன்" என்றது, 'அலறுதலில் விடுத்தவன்' என்னும் பொருளது. "படுத்தவன்" என்புழி, 'நலத்தில்' என்பது வருவிக்க.

8. பொ-ரை: இடம் பெயர்ந்து திரிவனவாகிய மூன்று மதில்களை எரித்தவனும், தேவர்கட்குத் தலைவனும், அடைதற்கு அன்புடைய