| கரியவன் நான்முகனும் மடி | | யும்முடி காண்பரிய | | பரியவன் பாசுபதன் பழ | | மண்ணிப் படிக்கரையே. | | 8 |
227. | வெற்றரைக் கற்றமணும் விரை | | யாதுவிண் டாலமுண்ணும் | | துற்றரைத் துற்றறுப்பான் துன்ன | | ஆடைத் தொழிலுடையீர் | | பெற்றரைப் பித்தரென்று கரு | | தேன்மின் படிக்கரையுள் | | பற்றரைப் பற்றிநின்று பழி | | பாவங்கள் தீர்மின்களே. | | 9 |
திருமாலும் பிரமனும் அட்ட புட்பங்களால் திருவடியில் அருச்சித்தும் அடியும் முடியும் காணமாட்டாத அளவிறந்தவனும், பாசுபத வேடத்தை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது, 'திருப்பழமண்ணிப்படிக்கரை' என்னும் தலமே. கு-ரை: 'திருமால், பிரமன்' என்னும் காரணக் கடவுளர் தாமும், அருச்சித்தற்கு உரியவரேயன்றி, எஞ்ஞான்றும் அடி முடி காணுதற்கு உரியவர் அல்லர் என்பார், இவ்வாறு ஓதியருளினார். அட்டபுட்பங்களாவன :- 'புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தனம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை' என்பன. 9. பொ-ரை: மிகுந்த பற்றுக்களை அறுத்தற் பொருட்டு உடையில்லாத அரையினை உடையராதலைக் கற்ற சமணர் வேடத்திலே மனம் விரையாது நீங்கி, கீளொடு பிணைத்தலை உடைய கோவண ஆடையை அணிந்த தொண்டர்களே, நஞ்சினை உண்ணும் உணவுடையவரும், எருதாகிய ஊர்தியை உடையவருமாகிய சிவபெருமானாரை அதுபோல்வனவற்றை நோக்கிப் பித்தரென்று இகழ்ச்சியாக நினையாதீர்கள்; திருப்பழமண்ணிப்படிக்கரையுள் கோயில் கொண்டிருக்கும் அவரையே துணையாகப் பற்றிநின்று, பழிபாவங்களிலிருந்து நீங்குங்கள். கு-ரை: "துற்றறுப்பான்" என்புழித் துற்ற, மிகுதி; அது, மிகுதியை யுடைய பற்றுக்களைக் குறித்தது. 'அறுப்பான் கற்ற அமண்'
|