பக்கம் எண் :

615
 
228.பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப் பழ

மண்ணிப் படிக்கரையை

அல்லியந் தாமரைத்தார் ஆ

ரூரன் உரைத்ததமிழ்

சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்

குந்தமர்க் குங்கிளைக்கும்

எல்லியும் நன்பகலும் மிடர்

கூருதல் இல்லையன்றே.

10

திருச்சிற்றம்பலம்


என முன்னே கூட்டுக. 'கற்ற' என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. "வெற்றரை" என்புழி நின்ற ககர ஒற்று, எதுகை நோக்கி வந்த விரித்தல். 'கன்று அமண்' எனப்பிரித்து, 'கன்று போலும் அமணர்' என்று உரைப்பாரும் உளர். "அமண்" என்பது, அமண் கோலத்தையே குறித்தது. 'அமணரும் ஆகாது, சைவரும் ஆகாது' எனப் பொருள் தருதலின், உம்மை எதிரது தழுவிய எச்சம். 'விண்டு' என்னும் எச்சம், "ஆடை" என்புழித் தொக்குநின்ற, 'அணிந்த' என்பதனோடு முடிந்தது. 'அமண் கோலம் ஒவ்வாது என வெறுத்து, வேறு தவக்கோலம் புனைந்த நீவிரும் சமணரைப் போலவே சிவபிரானைப் பித்தன் என்று இகழ்வீராயின், யாதொரு நெறியும் இல்லாதவராவீர்' என்பார், இவ்வாறு அருளிச்செய்தார். இகழ்வார், மீமாஞ்சகர் முதலியோர் என்க. "துற்றர்" என்பதில் உள்ள துற்று, உணவு.

10. பொ-ரை: பல உயிர்கள் வாழ்கின்ற தெளிந்த நீரையுடைய, 'திருப்பழமண்ணிப்படிக்கரை' என்னும் தலத்தை, அக இதழ்களையுடைய தாமரை மாலையை அணிந்த நம்பியாரூரன் புகழ்ந்து சொன்ன இத்தமிழ்ப் பாடலை இரவிலும், நல்ல பகலிலும் சொல்லுதலும் கேட்டலும் வல்லராகின்ற அத்தன்மையார்க்கும், அவரைச் சார்ந்து உற்றார்க்கும், அவ்வுற்றாரைப் பற்றி வரும் சுற்றத்தார்க்கும் துன்பம் மிகுதல் இல்லை.

கு-ரை: 'வற்றாத யாறு மண்ணியாறு' என்பதை, விளக்க "பல்லுயிர் வாழும் தெண்ணீர்ப் பழமண்ணி" என்று அருளினார். தாமரை மலர்மாலை அந்தணர்க்கு உரியது.