"அடியேன் படுதுயர் களையாய்" | (தி. 7 ப. 69 பா. 3) | | "வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே | அண்ணலே எனை அஞ்சலென் றருளாய்" | (தி. 7 ப. 70 பா. 2) | | "உறவிலேன் உனையன்றிமற் றடியேன் | ஒருபிழை பொறுத்தால் இழிவுண்டே" | (தி. 7 ப. 70 பா. 6) |
என்றற்றொடக்கத்தனவற்றை நோக்குக. ஞானசம்பந்தரது பாடல்களில் உள்ளவற்றினும், நாவுக்கரசரது பாடல்களில் பணிவு மிகுதியாய்த் தோன்றும்; எனினும், அவரது பாடல்களினும் அளவிட இயலாத பணிவு நம்பியாரூரரது பதிகத்திலே காணப்படுவதாம். முன்னை இருவரும் ஆண்டவனுக்கு அடிமையானவர்கள்; நம்பியாரூரர் அடியார்க்கு அடியரானவர். அதனானே இறைவன், தனக்கு அடிமைப்பட்டவரினும், தன் அடியார்க்கு அடிமைப்பட்டவரிடம் பெரிதும் எளியனாய் இருந்தான். இதனால், முன்னை இருவரும் அடியார்க்கு அடியராயினரல்லர் என்பது பொருளன்று; அடியார்க்கடியராதல் ஆளுடைய நம்பிகள்பால் முதன்மை பெற்று விளங்குகின்றது என்பதே பொருளாம். இது, திருத்தொண்டத் தொகை (தி. 7 ப. 39) யில் மட்டுமன்று; "அத்தா ஆலங் காடாஉன் அடியார்க் கடியே னாவேனே" (தி. 7 ப. 52 பா. 1) "நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன் யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்" (தி. 7 ப. 78 பா. 10) என்றாற்போலப் பிறவிடத்துங் காணப்படுவதேயாம். இது பற்றியே சேக்கிழார், திருத்தொண்டர் புராணத்திற்கு நம்பியாரூரரையே தனிப் பெருந்தலைவராகக் கொண்டு அருளிச் செய்தார். அவர் அப் புராணச்
|