"நயத்துக்குச் சுந்தரனார்" என்ற முதியோர் மொழிப்படி, நயம் மிக நிறைந்ததாகிய இத் திருமுறைக்கண் உள்ள இலக்கிய இன்பங்களை, ஆதீனக் கல்லூரிப் பேராசிரியை வித்துவான், திருமதி ப. நீலா அவர்கள், இனிதெடுத்துச் சுவைபடத் தொகுத்து அளித்தார்கள். அப் பல்கலைக் கல்லூரிப் பேராசிரியர் சிரோமணி, வித்துவான், திரு. வி. சபேசன் அவர்கள் இத் திருமுறையின் திருப்பதிகங்களுக்கு வரலாறு எழுதித் தந்ததுடன், திருப்பாடல்களில் ஆங்காங்கு அமைந்த புராண வரலாறுகளையும், நாயன்மார் வரலாறுகளையும் ஒருங்கு தொகுத்து விளக்கம் செய்துள்ளார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மொழியாராய்ச்சித்துறை, செஞ்சொற் கொண்டல், வித்துவான். திரு. சொ. சிங்காரவேலன் எம். ஏ., அவர்கள், 'சுந்தரர் தேவாரப் பொருள் ஆராய்ச்சி' என்னும் தலைப்பில் அரிய ஆராய்ச்சிக் கட்டுரை யொன்றினை, தங்களுக்கு இயல்பாய் உள்ள ஆழ்ந்து அகன்ற நுண்ணிய ஆராய்ச்சித்திறன் பொதுள எழுதி உதவினார்கள். இத் திருமுறைத் திருப்பதிகங்களின் சிறப்புத் தலவரலாறுகளைக் கல்வெட்டுச் சான்றுகளுடன் ஆராய்ந்து எழுதியும், உரைபற்றிய அரும் பொருள் அகராதி, மேற்கோள் அகராதி, சொல்லகராதி இவைகளைக் கண்டு தொகுத்தும் அளித்தவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மொழியாராய்ச்சித்துறை விரிவுரையாளர், திருவையாறு, கல்வெட்டாராய்ச்சிக் கலைஞர், வித்துவான், திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்கள். இவர்கள் அனைவர்க்கும் தனித்தனியே எனது உளங்கனிந்த நன்றி உரியதாகின்றது. முன்னைய ஆறு திருமுறைகள் போலவே, இவ்வேழாந் திருமுறையையும் சீரிய முறையில் அச்சிட்டு உதவிய ஞானசம்பந்தம் அச்சகத்தார்க்கும் எனது நன்றி உரியது. ஞானசம்பந்தர், நாவுக்கரசர் திருமுறைகளுடன் சுந்தரர் தேவாரத் திருமுறைப் பணியையும் முன்னின்று இனிது முற்றுவித்தருளிய செந்தமிழ் சொக்கன் திருவருளை இடையறாது எண்ணி இறைஞ்சுகின்றேன். ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணியவர்கள், தங்கள் ஆதீன முதற்
|