குரவர் ஸ்ரீ குருஞானசம்பந்தர், 'திருமுறைகள் ஓதாய் - மனமே உனக்கென்ன வாய்' என்று அருளிச்செய்த திருவாக்கில் ஊறித் திளைத்தவர்கள். திருமுறை வழிபாடு, திருமுறைப் பாராயணம் திருமுறைச் சிந்தனை முதலியவற்றில் பெரிதும் ஈடுபாடுடையவர்கள். கயிலைத் திருப்பதிகங்களை - சிறப்பாகச் சுந்தரரது, 'தானெனை முன்படைத் தான்' என்னும் திருப்பதிகத்தை ஓதக் கேட்பதில் பெருவிருப்புடையவர்கள். பன்னிரு திருமுறைகளும் நன்முறையில் பொருள் விளக்கங்களுடன் வெளிவந்து உலவவேண்டும் என்னும் அவர்களது திருவுளப் பாங்கின்படி, ஆறு திருமுறைகள் முன்னமே ஆதீன வெளியீடாக வெளிவந்துள்ளன. இதுபோழ்து ஏழாந்திருமுறை, ஸ்ரீ குருஞானசம்பந்தர் குருபூஜை மலராக வெளிவருகின்றது. ஏனைய திருமுறைகளும் இனிது வெளிவரத் திருவருளை யாவரும் இறைஞ்சுவோமாக. வாழ்க திருமுறை!வளர்க திருநெறி !! தருமையாதீனம் 19.05.64 | இங்ஙனம், ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்கள், அருளாணைப்படி, அடியேன், சி. அருணைவடிவேல். |
|