294. | பண்ணிடைத் தமிழொப்பாய் | | பழத்தினிற் சுவையொப்பாய் | | கண்ணிடை மணியொப்பாய் | | கடுவிருட் சுடரொப்பாய் | | மண்ணிடை யடியார்கள் | | மனத்திடர் வாராமே | | விண்ணிடைக் குருகாவூர் | | வெள்ளடை நீயன்றே. | | 6 |
295. | போந்தனை தரியாமே | | நமன்றமர் புகுந்தென்னை | | நோந்தன செய்தாலும் | | நுன்னல தறியேன்நான் |
6. பொ-ரை: திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, பரவெளியின்கண் உள்ள நீ, இம் மண்ணுலகில் வாழும் அடியவர்களது மனத்தின்கண்யாதொரு துன்பமும் தோன்றாதவாறு, பண்ணின்கண் இனிமையைப் போன்றும், பழத்தின்கண் சுவையைப் போன்றும், கண்ணின்கண் மணியைப் போன்றும், மிக்க இருளின்கண் விளக்கைப் போன்றும் நிற்கின்றாயன்றோ! கு-ரை: பண்ணிடைத் தமிழும், பழத்தினிற் சுவையும் இன்பம் பயத்தற்கும், கண்ணிடை மணியும், கடுவிருட் சுடரும் உறுதியுணர்த்தற்கும் உவமை யாயின. அவற்றுள் பண்ணிடைத் தமிழ் உள்ளுணர்வநுபவமும், பழத்தினிற் சுவைபுறவுணர்வநுபவமும் பற்றிவந்தன. அவ்வாறே கண்ணிடைமணி, அவர்பொருட்டு இறைவன்தானும் பொருள்களை உடன் சென்று காணும் நிலையையும் கடுவிருட் சுடர் பொருள்களைக் காட்டும் நிலையையும் பற்றி வந்தன. "இடை" என்றன, ஏழனுருபுகள். 'விண்ணிடை நீ' என இயைக்க. "மனத்திடர் வாராமே ஒப்பாய்" என்றதனால். 'அவ்வாறு நிற்றல் மனத்திடத்து' என்பது பெற்றாம். "ஒப்பாயன்றே" என்றதன்பின், 'அதனால் இது செய்தாய்' என, தம் பசித் துன்பத்தையும் வெயிற்றுன்பத்தையும் அறிந்து வந்து, சோறும் நீரும் உதவி, நிழலளித்து ஆவியைப் போகாமே காத்து ஆண்ட அருட்டிறத்தை நினைந்துருகி அருளியது, குறிப்பெச்சமாய் நின்றது. 7. பொ-ரை: இறக்கும் நிலை வரும் காலத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில்
|