| சாந்தனை வருமேலுந் | | தவிர்த்தென்னை யாட்கொண்ட | | வேந்தனே குருகாவூர் | | வெள்ளடை நீயன்றே. | | 7 |
296. | மலக்கில்நின் னடியார்கள் | | மனத்திடை மால்தீர்ப்பாய் | | சலச்சல மிடுக்குடைய | | தருமனார் தமரென்னைக் | | கலக்குவான் வந்தாலுங் | | கடுந்துயர் வாராமே | | விலக்குவாய் குருகாவூர் | | வெள்ளடை நீயன்றே. | | 8 |
எழுந்தருளியிருப்பவனே, எனது துன்பத்தைச் சிறிதும் பொறாயர்ய்ப் போந்தவன் நீயேயன்றோ! ஆதலின், இயமனுக்கு ஏவலராய் உள்ளார் வந்து எனக்கு யான் துன்புறும் செயல்களைச் செய்யினும், யான் உன்னையன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன். கு-ரை: "போந்தனை" என்றது, முன்னிலை வினையாலணையும் பெயர். சாதலைத் தவிர்த்து ஆண்டமையால், 'நமன் தமர் என் மாட்டு வாரார்' என்பதுபட நின்றமையின், "செய்தாலும்" என்ற உம்மை, எதிர்மறை. "நோந்தனை, சாந்தனை" என்புழி நின்ற, 'அளவு' என்னும் பொருளைத் தரும், "தனை" இரண்டும், அளவையுடைய செயல்மேலும், நிலையின்மேலும் நின்றன. 'ஏல்வை' என்பது, "ஏல்" என நின்றது. அவ்விடத்து உள்ள உம்மை சிறப்பு, 'ஏனும்' என்பதன் திரிபாகிய ஏலும் என்பதாக வைத்து உரைத்தலும் ஆம். 8. பொ-ரை: அலைவில்லாத உள்ளத்தினையுடைய உன் அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் பற்றறக்களைபவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும், மிடுக்கினையும் உடைய இயமன் தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும், அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன் நீயேயன்றோ! கு-ரை: அலைவில்லாமை தெளிவினாலும், மால் தீர்தல் அனுபவத்தாலுமாம். ஆகவே, 'மால்' என்றது, வாசனை மாத்திரமாய்
|