பக்கம் எண் :

671
 
297.படுவிப்பாய் உனக்கேயாட்

பலரையும் பணியாமே

தொடுவிப்பாய் துகிலொடுபொன்

தோலுடுத் துழல்வானே

கெடுவிப்பாய் அல்லாதார்க்

கேடிலாப் பொன்னடிக்கே

விடுவிப்பாய் குருகாவூர்

வெள்ளடை நீயன்றே.

9



நிற்பதைக் குறித்தல் அறிக. 'சலம்' என்னும் பலபொருள் ஒருசொல், முன்னர்த் துன்பத்தையும், பின்னர் வெகுளியையும் குறித்து வந்தன. "வந்தாலும்" என்னும் உம்மை, சிறப்பு. அதனால், ஏனைய சிறுதுயரங்களை விலக்குதல் சொல்லவேண்டாவாயிற்று.

9. பொ-ரை: திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நல்லோரைப் பிறரை வணங்கித் துன்புறாதவாறு உனக்கே ஆட்படச் செய்பவனும், நீ தோலை உடுத்து எலும்பை அணியினும் அவர்கட்கு நல்லாடைகளை உடுப்பத்துப் பொன்னணிகளை அணிவிப்பவனும், முடிவில் அவர்களை அழிவில்லாத உனது பொன்போலும் செவ்விய திருவடிக்கண்ணே புகுவிப்பவனும், நல்லோரல்லாதாரைக் கெடுவிப்பவனும் நீயேயன்றோ!

கு-ரை: 'பொன்' என்றது, ஆகுபெயராய் அணியின்மேல் நின்றது; அதனை, ஏற்புழிக் கோடலால், தொடுவனவற்றிற்கு மட்டுமே கொள்க. 'தொடுவனவற்றைத் தொடுவிப்பாய்' என்றதனால், 'இடுவன வற்றை இடுவிப்பாய், செறிப்பனவற்றைச் செறிப்பிப்பாய்' என்பனவும் பிறவும் தழுவப்பட்டன. "துகிலொடு" என்னும் ஒடுவுருபு, "தொடியொடு - தொல்கவின் வாடிய தோள்" (குறள் - 1235.) என்றாற் போல, வேறுவினைப் பொருட்கண் வந்தது. "தோலுடுத் துழல் வானே" என்றது, உடம்பொடு புணர்த்தலாகலின், அதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது, " அடியாரைப் பொன் தொடுவிப்பாய்" என்றதனால், அவன் எலும்பணிதலைக் கூறுதலுங் கருத்தாதலும், "அல்லாதாரை" என்றதனால், 'நல்லாரை' என்பதும் பெறப்பட்டன. நல்லார், திருத்தொண்டின் நெறியைப் பற்றினவர்; அல்லார், அதனைப் பற்றாதவர், அவரைக் கெடுவித்தலாவது, வினைவழியில் உழலச் செய்தல், திருவடியை அடைந்தார் கேடெய்தாமைக்குக் காரணம்