பக்கம் எண் :

672
 
298.வளங்கனி பொழின்மல்கு

வயலணிந் தழகாய

விளங்கொளி குருகாவூர்

வெள்ளடை யுறைவானை

இளங்கிளை யாரூரன்

வனப்பகை யவளப்பன்

உளங்குளிர் தமிழ்மாலை

பத்தர்கட் குரையாமே.

10

திருச்சிற்றம்பலம்


கூறுவார், "கேடிலாப் பொன்னடி" என்றருளினார். அருளவே, ஏனைய சார்புகள் கேடுடையன என்பதும், அவற்றை அடைந்தார் கெடுவர் என்பதும் பெறப்பட்டன.

10. பொ-ரை: வளப்பம் மிகுந்த சோலைகளையும், நிறைந்த வயல்களையும் சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற, வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, சிங்கடிக்குத் தங்கையாகிய, 'வனப்பகை' என்பவளுக்குத் தந்தையாம் நம்பியாரூரன், மனம் இன்புற்றுப் பாடிய இத் தமிழ்மாலை, அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும்.

கு-ரை: "தமிழ்மாலை" என்பது ஒருசொல் நடைத்தாய், "குளிர்" என்றதனோடு, காரணகாரியப் பொருட்டாகிய இறந்த கால வினைத்தொகை நிலைபடத் தொக்கது. புகழென்னும் பொருளதாகிய, "உரை" என்பது ஆகுபெயராய்; அதனாலாகிய மாலையை உணர்த்திற்று. "பத்தர்கட்கு உரையாம்" என்றது, 'திருக்குருகாவூர் இறைவனைப் பரவுவார், இத் தமிழ்மாலையாலே பரவுக' எனவும், 'அங்ஙனம் பரவின், இதன்கண் அவ்விறைவன் தன் அடியார்கட்குச் செய்தனவாகவும், செய்வனவாகவும் சொல்லப்பட்ட பயன்களை அடைவார்கள்' எனவும் அருளியவாறாம்.