பக்கம் எண் :

674
 
300.நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே

நிறைந்து தோன்றும்

காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக்

கருப்ப றியலூர்க்

கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங்

கொகுடிக் கோயில்

ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்

கினிய வாறே.

2



'செம்மாந்து' என்பதே பாடம் எனலுமாம். 'சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் உகந்து திறம்பாவண்ணம் வைத்து என்றது, இறைவரைத் தியானிக்குமாற்றினை விதந்தருளியவாறு. 'கொகுடி' என்பது முல்லைக் கொடியுள் ஒருவகை. அதனாற் சூழப்பெற்றது இக் கோயில் என்பதும், அதுதானே இங்குக் கோயில் மரவகையாய் இருந்தது என்பதும் இத் திருப்பதிகத்தாற் கொள்ளக்கிடக்கின்றன. "மனத்தினால்" என வேண்டா கூறியது, 'மனம் தன்பயனைத் தருமாறு' என அதன் சிறப்பை முடித்தற்கு. 'நினைந்த போது' என்பது, 'இனிய' என்னும் பெயரெச்சக் குறிப்போ முடியும். "ஆறு" என்றது, 'தன்மை' என்னும் பொருளதாய் நிற்க, அதன்பின், 'சொல்லுதற்கரிது' என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. 'சிவன்' என்னும் சொற்கு, 'இன்பத்திற்குக் காரணன்' என்னும் பொருளும் உண்மை அறிக. "அவர்" என்றது, ஒருமைப் பன்மை மயக்கம். இதனை, "புனிதரவர் தமைநினையும் இன்பங்கூறிச் சாற்றியமெய்த் திருப்பதிகம்" (தி. 12 பெ. ஏ. கோ. பு. 117.) எனச் சேக்கிழார் அருளுதலின், 'அவர்' என்பதே பாட மாதல் பெறப்படுகின்றது. இத் திருப்பாடலுள் தியான வழிபாடு சிறந் தெடுத்து அருளப்பட்டது.

2. பொ-ரை: திருநீற்றால் நிறைந்த மேனியை உடையவராய் நினைக்கின்றவரது உள்ளத்தில் நிறைந்து தோன்றுபவனும், 'காற்று' தீ, ஞாயிறு, திங்கள்' என்னும் பொருள்களாய் நிற்பவனும், அழித்தல் தொழிலையுடையவனும், கூற்றுவனை உதைத்தவனும், வரிசையாகப் பொருந்திய வளைகளையுடைய உமாதேவியோடும் திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலைத் தனக்கு உரிய இடமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்த போது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.

கு-ரை: "காற்றானை" என்பது முதலிய நான்கிலும் தனித் தனி