317. | தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர் பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே. | | 8 |
318. | பேற னூர்பிறைச் சென்னியி னான்பெரு வேளூர் தேற னூர்திரு மாமகள் கோன்திரு மாலோர் கூற னூர்குரங் காடு துறைதிருக் கோவல் ஏற னூரெய்த மானிடை யாறிடை மருதே. | | 9 |
319. | ஊறு வாயினன் நாடிய வன்றொண்ட னூரன் தேறு வார்சிந்தை தேறு மிடஞ்செங்கண் வெள்ளே |
8. பொ-ரை: ஒளிவடிவினும், தீவினைகள் குறைய நிற்பவனும், திருவருளாகிய தொடர்பினை உடையவனும், மேலிடத்தில் இருப்பவனும், தூயவனும், பாவத்தைப் போக்குபவனும், 'நள்ளாறு' என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், 'ஆக்கூர், நனிபள்ளி, இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே. கு-ரை: 'தேசனூர், பாசனூர், நாசனூர், ஈசனூர்' என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர். 9. பொ-ரை: எல்லா உயிர்கட்கும் பேறாகின்றவனும், பிறையை யணிந்த சடையை உடையவனும், தெளியப்படுபவனும், திருமகளுக்குத் தலைவனாகிய திருமாலை ஒரு பாகத்தில் உடையவனும், இடபத்தை உடையவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், 'பெருவேளூர், குரங்காடுதுறை, கோவலூர், இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே. கு-ரை: 'நாடு' என்பது அடியாக, 'நாடன்' என்னும் பெயர் வருதல்போல, 'பேறு' முதலியன அடியாக, 'பேறன்' முதலிய பெயர்கள் வந்தன. 'பேறனூர், தேறனூர், கூறனூர், ஏறனூர்' என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர். 'வடகுரங்காடுதுறை, தென்குரங்காடுதுறை' எனக் குரங்காடுதுறைகள் இரண்டு உள. 10. பொ-ரை: சிவந்த கண்களையுடைய வெள்ளிய விடையை ஏறுகின்றவரும், யாவராலும் அடையப்படும் பெருமானுமாய் உள்ள
|