| |  | றேறு வாரெய்த மானிடை யாறிடை மருதைக் கூறு வார்வினை எவ்விட மெய் குளிர்வாரே.
 |  |  | 10 | 
திருச்சிற்றம்பலம் 
 இறைவரது இடையாற்றையும், இடைமருதையும், வன்றொண்டனாகிய நம்பியாரூரன் சுவை ஊறும் வாயினையுடையவனாய், தெளியத் தகுவாரது உள்ளங்கள் தெளிதற்கு வாயிலாய் உள்ள தலங்களோடு நினைந்து பாடிய இப்பாடல்களைச் சொல்லுகின்றவர்கள், வினைத் துன்பம் நீங்க, உடல் குளிர்வார்கள். கு-ரை: உடல் குளிர்தல் சொல்லவே, உள்ளமும், உயிரும் குளிர்தல் சொல்லவேண்டாவாயிற்று. 'ஊறிவாயின' முதலாக ஓதுவன பாடம் அல்ல. 'நாடிய' என்பது வினைப்பெயர். நாடுதல், தன் காரணந் தோற்றி நின்றது. 'இடைமருதை ஊரன் ஊறுவாயினனாய்த் தேறும் இடங்களொடு நாடிய கூறுவார்' எனக் கொண்டு கூட்டிப்பொருள் கொள்க. 'எவ்வம்' என்பதில், அம்முக் குறைந்தது. | காஞ்சிப் புராணம் |  |  |  | ஒருமணத்தைச் சிதைவுசெய்து வல்வழக்கிட் |  |  டாட்கொண்ட வுவனைக் கொண்டே |  | இருமணத்தைக் கொண்டருளிப் பணிகொண்ட |  |  வல்லாளன் எல்லாம் உய்யப் |  | பெருமணச்சீர்த் திருத்தொண்டத் தொகைவிரித்த |  |  பேரருளின் பெருமாள் என்றும் |  | திருமணக்கோ லப்பெருமாள் மறைப்பெருமாள் |  |  எமதுகுல தெய்வம் ஆமால். |  |  -சிவஞானமுனிவர் | 
 |