32. திருக்கோடிக்குழகர் பதிக வரலாறு: சுந்தரர், சேரமான் பெருமாளுடன் திருமறைக்காடு, அகத்தியான்பள்ளி இவற்றை வணங்கித் திருக்கோடிக்கரையை அணைந்து கோடிக்குழகர் தனியாய் இருத்தற்கு இரங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. சேர. புரா. 89) குறிப்பு: இத் திருப்பதிகம் நுதலிய பொருள் இதன் வரலாற்றானே விளங்கும். பண்: கொல்லி பதிக எண்: 32 திருச்சிற்றம்பலம் 320. | கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல் குடிதான் அய லேஇருந் தாற்குற்ற மாமோ கொடியேன்கண்கள் கண்டன கோடிக் குழகீர் அடிகேள்உமக் கார்துணை யாஇருந் தீரே. | | 1 |
321. | முன்றான்கடல் நஞ்சமுண் டவ்வத னாலோ பின்றான்பர வைக்குப காரஞ்செய் தாயோ குன்றாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா என்றான்றனி யேஇருந் தாய்எம்பி ரானே. | | 2 |
1. பொ-ரை: கோடிக்குழகரே, அடிகளே, கடற்காற்றுக் கடிதாய் வந்து வீச, இக் கடற்கரையின்மேல், உமக்கு, யார் துணையாய் இருக்க இருக்கின்றீர்? நீர் இங்குத் தனித்து இருத்தலையே கொடியேனது கண்கள் கண்டன; குடிதான் வேறோர் இடத்திலே இருந்தால் யாதேனும் குற்றம் உண்டாகுமோ? சொல்லீர். கு-ரை: திருமறைக்காட்டு எல்லையின் கோடியில் இருக்கும் அழகராதல் பற்றி, இங்கு உள்ள பெருமான், 'கோடிக் குழகர்' எனப் படுவர். அவரது பெயரே, பின்னர் அத் தலத்திற்கும் ஆயிற்று. அக்கடற் கரையையும், 'கோடிக்கரை' என்பர். 'துணையாக' என்பது பாடம் அன்று. 2. பொ-ரை: குறையாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையில்
|