322. | மத்தம்மலி சூழ்மறைக் காடதன் தென்பால் பத்தர்பலர் பாட இருந்த பரமா கொத்தார்பொழில் சூழ்தரு கோடிக் குழகா எத்தால்தனி யேஇருந் தாய்எம் பிரானே. | | 3 |
323. | காடேல்மிக வாலிது காரிகை யஞ்சக் கூடிப்பொந்தில் ஆந்தைகள் கூகை குழறல் வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர் கோடிக்குழ காஇடங் கோயில்கொண் டாயே. | | 4 |
உள்ள அழகனே, எம்பெருமானே, முன்பு கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட அதனால், மீட்டும் அவ்வாறு தோன்றின் அதனை உண்டற்பொருட்டோ? அல்லது கடல் தனியே இருத்தல் கருதி அதற்குத் துணையிருத்தற் பொருட்டோ? எக்காரணத்தால் இங்கு நீ தனியே இருக்கின்றாய்? சொல். கு-ரை: 'பின்றான்' என்பது, விகற்பத்தின்கண் வரும், 'அன்றி' என்பதன் பொருட்டாய் நின்றது. 'பொழில் சூழ்தரு கோடி' என இயையும். பொழில், கடற்கரைச் சோலை. 3. பொ-ரை: களிப்புடையவர் நிறையச் சூழ்ந்த திருமறைக் காட்டிற்குத் தென்பால், அடியார்கள் பலர் பாடித் துதிக்க எழுந்தருளியிருக்கும் பரமனே, பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையின்கண் உள்ள அழகனே, எம்பெருமானே, எக்காரணத்தால் நீ இங்குத் தனியே இருக்கின்றாய்? சொல். கு-ரை: மத்தம், களிப்பு; அஃது, அதனை உடையார்மேல் நின்றது. களிப்பிற்குக் காரணம், செல்வ மிகுதி. "மலி" என்பது, 'மலிய' எனப் பொருள் தந்தது. 4. பொ-ரை: கோடிக்கரைக்கண் உள்ள அழகனே! இங்குள்ள காடோ மிகப் பெரிது; எப்பொழுதும் உன் தேவி அச்சங்கொள்ளுமாறு மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும், கூகைகளும் பல கூடிக் கூக்குரலிடுதல் இடையறாது; வேட்டைத் தொழில் செய்து இங்கு வாழ்பவர் மிகவுங் கொடியவர்; வஞ்சனையுடையவர்; இவ்விடத்தில் உறைவிடத்தைக் கொண்டாயே; இஃது என்? கு-ரை: "காடு" என்றதும், கடற்கரைச் சோலையை, அங்கும்
|