324. | மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும் மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க் கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே. | | 5 |
325. | அரவேரல்கு லாளையொர் பாக மமர்ந்து மரவங்கமழ் மாமறைக் காடதன் தென்பால் குரவம்பொழில் சூழ்தரு கோடிக் குழகா இரவேதுணை யாயிருந் தாய்எம்பி ரானே. | | 6 |
ஆறலை கள்வர் வாழ்தல் பெறப்பட்டது. 'இடையறாது' என்பது சொல்லெச்சம்; 'குழற' என்பது பாடம் அன்று. 'இவ்விடம்' எனச் சுட்டு வருவிக்க. 5. பொ-ரை: மை பொருந்திய கண்களையுடைய இறைவியின் பாகத்தை உடையவனே, 'கங்கை' என்பவளும் உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாளேயன்றி அவளுக்கு வேறிடம் இல்லை; இங்ஙனமாக, கையில் நிறைந்த வளைகளையுடைய காடுகாளோடும் கூடி, பூக்களைக் கொய்தல் பொருந்திய சோலைகளையுடைய கோடிக்கரையையே உறைவிடமாகக் கொண்டாய்; இஃது எவ்வாறு? கு-ரை: காடுகாள் - காடுகிழாள்; காட்டை உரிமையாக உடையவள். இவளை, 'பழையோள்' என்ப. 1 'காளி' என்றல், இவளையே. 'காடுகள்' என்பது பிழைபட்ட பாடம். "காடுகாள் புணர்ந்த பரிசும் பதிகத்திடை வைத்தார்" (தி. 12 கழறிற்றறிவார் புராணம் 89) என்ற சேக்கிழார் திருப்பாடலை எடுத்துக்காட்டியவர் தாமும், இதனைத் திருத்தாதே குறிப்பெழுதிச் சென்றார். திருமுறைத் திருப்பாடல்களில் பலவிடங்களில் பாடங்கள் பிழைபட ஓதப்படுகின்றன என்பதற்கு, இஃதொன்றே போதிய சான்றாகும். இருவர் மகளிர் உடம்பிலே நீங்காதிருக்க, மூன்றாமவளைக் கூடியது எவ்வாறு என, நகை தோன்ற வினாயது, 'இத்துணை மகளிரோடும் இங்குத் தனியாய் இருத்தல் தகுமோ' என்பதனைத் தெரிவித்தற் பொருட்டென்க. 6. பொ-ரை: குங்கும மரத்தின் பூக்கள் மணம் வீசுகின்ற பெருமை பொருந்திய திருமறைக்காட்டிற்குத் தென்பால் குராமரச் சோலை சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே,
1. திருமுருகாற்றுப்படை - 259.
|