பக்கம் எண் :

691
 
326.பறையுங்குழ லும்மொலி பாடல் இயம்ப
அறையுங்கழ லார்க்கநின் றாடும் அமுதே
குறையாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
இறைவாதனி யேஇருந் தாய்எம்பி ரானே.

7

 

327.ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ
அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே.

8



பாம்பின் படம் போலும் அல்குலை யுடைய உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்து, இங்கு இராக்காலமே துணையாக இருக்கின்றாய்; இஃது என்?

கு-ரை: "அரவு" முதலாகுபெயர். 'குரவப்பொழில்' என்பது மெலித்தலாயிற்று. "இரவே துணையா" என்றது, 'ஒருவரும் துணையில்லையாக' என்றபடி.

7. பொ-ரை: பறையும், குழலும், ஒலிக்கின்ற பாடலும் முழங்க, ஒலிக்கின்ற கழல் ஆரவாரிக்கும்படி அம்பலத்தில் தோன்றி நின்று ஆடுகின்ற அமுதம்போல்பவனே, றைதல் இல்லாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, இறைவனே, எம்பெருமானே, நீ ஏன் இங்குத் தனியாய் இருக்கின்றாய்?

கு-ரை: இங்ஙனம் பலவாறு விளித்தது, 'நீ இவ்வாறு தனித்திருத்தற்கு உரியையோ' என்னுங் குறிப்பினால் என்க.

8. பொ-ரை: முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே, ஒற்றி என்ற குறையினால் ஒற்றியூரையும், ஆருடையது என்ற காரணத்தால் ஆருரையும் அறுதியாக நீங்கிவிட்டாயோ? எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய்?

கு-ரை: கருத்து நோக்கி, இவ்வாறு உரைக்கப்பட்டது. சிலேடை வகையால் இங்ஙனம் வினாயது, உனக்கு ஊர் இல்லையா? எத்துணையோ ஊர்கள் உள்ளனவே; அவைகளை எல்லாம் விடுத்து, ஒருவரும் இல்லாத இவ்விடத்தில் ஏன் வந்து இருத்தல் வேண்டும்? என்றற்கு, 'அது' என்னும் சுட்டுப் பெயர்கள், முன்னுள்ள குறிப்பினால்,