பக்கம் எண் :

69
 
சுந்தரரும் இச்செயலைப் பலவிடங்களில் குறித்துப் பாடியுள்ளார்.

"நம்பனே அன்று வெண்ணெய் நல் லூரில்
நாயினேன் தன்னைஆட் கொண்ட
சம்புவே."

(தி. 7 ப. 69 பா. 8)

"மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை
வலிய வந்தெனை ஆண்டு கொண் டானே"

(தி. 7 ப. 70 பா. 2)

உலகியல் மயக்கப் பித்துக் கொண்டவர் பேரருளுடை யானைப் பார்த்துப் பித்தனோ என்று வினவிய விதம் பெருவியப்பைத் தருகிறது. பேரருளுடைய பெருமானின் செயல்கள் பித்தனின் செயல்களோடு உவமிப்பதில் பெரிதான தவறு இருக்கமுடியாது. தக்கன் வேள்வியில் பீடழிந்த பிறையைச் சூடி அருள் செய்தவன் தானே செம்மேனியம்மான்.

திருஞானசம்பந்தப் பெருமானும் இந்தச் செயலைச் சுட்டிப் பாடத் தவறவில்லை.

விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே.

(தி. 1 ப. 89 பா. 3)

"பித்தா" என்று தொடங்கும் பதிகத்திலிருந்து "ஊழிதோறூழி" என்பது முடிய முப்பத்தெட்டாயிரம் தேவாரப் பாக்கள் பாடியருளினார் சுந்தரர் என்கின்றது திருமுறைகண்ட புராணம். (பா. 16)

"பின்புசில நாளின்கண் ஆரூர் நம்பி

பிறங்குதிரு வெண்ணெய் நல்லூர்ப் பித்தாவென்னும்

இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும்

ஈறாய்முப் பத்தெண்ணா யிரமதாக

முன்புபுகன் றவர்நொடித்தான் மலையிற் சேர்ந்தார்"

ஏழாம் திருமுறையின்கண் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கையாண்ட