பக்கம் எண் :

693
 

33. பொது

(நமக்கடிகளாகியவடிகள்)

பதிக வரலாறு:

நாவலூரர், திருமுதுகுன்றத்தில் ஆற்றிலிட்ட பொன்னைத் திருவாரூர்க் கமலாலயத்தில் எடுத்துப் பரவையாருடன் திருவாரூரில் மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் நாள்களில், இறைவரைப் போற்றும் ஆனந்தம் மேலிட அடியார்களுடன் பேரருள் திறம் வினவிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 140, 141)

குறிப்பு: இத்திருப்பதிகம், திருவாரூர்ப் பெருமானாரைப் பணிவதால் உண்டான பேரின்பம் பெரிதும் சிறந்தோங்கினமையால், அவரது இயல்புகளை அடியார்களை வினவுமுகத்தாற் பாராட்டி அருளிச் செய்தது என்பது, சேக்கிழார் நாயனாராலே குறிப்பிடப்பட்டது.

துணிந்து திட்பம் எய்திய பொருளை அங்ஙனம் திட்பம் எய்தாததுபோல வினாவுதல், அங்ஙனம் வினவுவதனால் விளையும் இன்பத்தை நுகர்தல் வேட்கையாலேயாம். திருநாவுக்கரசு சுவாமிகளும், இவ்வாறு தமது திருத்தாண்டகங்களுள் அருளிச் செய்தமை அறிக.

பண்: கொல்லி

பதிக எண்: 33

திருச்சிற்றம்பலம்

330.

பாறு தாங்கிய காட ரோபடு

தலைய ரோமலைப் பாவையோர்

கூறு தாங்கிய குழக ரோகுழைக்

காத ரோகுறுங் கோட்டிள

ஏறு தாங்கிய கொடிய ரோசுடு

பொடிய ரோஇலங் கும்பிறை

ஆறு தாங்கிய சடைய ரோநமக்

கடிக ளாகிய அடிகளே.

1



1. பொ-ரை: தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் வாழ்பவரோ? அழிந்த தலையை