பக்கம் எண் :

694
 
331.

இட்டி தாகவந் துரைமி னோநுமக்

கிசையு மாநினைந் தேத்துவீர்

கட்டி வாழ்வது நாக மோசடை

மேலும் நாறுக ரந்தையோ

பட்டி ஏறுகந் தேற ரோபடு

வெண்ட லைப்பலி கொண்டுவந்

தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்

கடிக ளாகிய அடிகளே.

2



ஏந்தியவரோ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ? குழையணிந்த காதினை உயைவரோ? சிறிய கொம்பினையுடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ? சுடப்பட்ட நீற்றை அணிந்தவரோ? விளங்குகின்ற பிறையோடு ஆற்றைச் சுமந்த சடையை உடையவரோ? சொல்லுமின்.

கு-ரை: 'தொண்டீர்' என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது; இறுதித் திருப்பாடலில், "பத்தர்காள்" என்றலைக் காண்க. தலையை உடையவரது அழிவு தலையின்மேல் ஏற்றியுரைக்கப்பட்டது. இளைய ஏறாகலின், குறுங்கோட்டினை உடையதாயிற்று. பலரும் பலரைத் தலைவர் என்றலின், 'நமக்குத் தலைவராய் உள்ள தலைவர்' என்று அருளினார்.

2. பொ-ரை: இறைவரை உமக்கு ஏற்றவாற்றால் நினைந்து துதிக்கின்றவர்களே, அருகில் வந்து சொல்லுமின்; நமக்குத் தலைவராகிய தலைவர், கழுத்து, கை, அரை முதலிய இடங்களில் கட்டிக்கொண்டு வாழ்வது பாம்போ? சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற கரந்தையோ? அவர், தொழுவிற் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ? தம் அடியார்களை, அழிந்த வெண்டலையில் பிச்சையேற்றுக்கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ?

கு-ரை: இட்டிதாக - சிறிதாக; 'இடைநிலம் சிறிதாக' என்றபடி. இசையுமா நினைதலாவது, போகம் வேண்டுவார் போக வடிவிலும், யோகம் வேண்டுவார் யோக வடிவிலும், துன்பம் நீங்க வேண்டுவார் வேகவடிவிலும் நினைதல். 'இங்ஙனமாதலின், நீவிர் அவர் இயல்பெல்லாம் அறிவீர்; ஆதலின் வினவுகின்றேன்; சொன்மின்' என்றவாறு.