336. | மெய்யென் சொல்லுமின் நமரங் காள்நுமக் | | கிசைவு மாநினைந் தேத்துவீர் | | கையிற் சூலம துடைய ரோகரி | | காட ரோகறைக் கண்டரோ | | வெய்ய பாம்பரை யார்ப்ப ரோவிடை | | யேற ரோகடை தோறுஞ்சென் | | றையங் கொள்ளுமவ் வடிக ளோநமக் | | கடிக ளாகிய வடிகளே. | | 7 |
337. | நீடு வாழ்பதி யுடைய ரோஅயன் | | நெடிய மாலுக்கும் நெடியரோ | | பாடு வாரையும் உடைய ரோதமைப் | | பற்றி னார்கட்கு நல்லரோ | | காடு தான் அரங் காக வேகைகள் | | எட்டி னோடில யம்பட | | ஆடு வாரெனப் படுவ ரோநமக் | | கடிக ளாகிய வடிகளே. | | 8 |
7. பொ-ரை: இறைவரை உமக்கு ஏற்குமாற்றால் நினைந்து துதிப் பீராகிய நம்மவர்களே! நீவிர் அறிந்த உண்மைகள் யாவை? அவற்றைச் சொல்லுமின்; நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், கையில் சூலம் உடையரோ? கரிந்த காட்டில் வாழ்வரோ? கறுப்பை உடைய கண்டத்தை உடையரோ? கொடிய பாம்பை அரையிற் கட்டுவரோ? விடையை ஏறுதல் உடையரோ?இல்லத்து வாயில்தோறும் சென்று பிச்சை ஏற்கின்ற, பற்றில்லாத துறவரோ? கு-ரை: "அவ்வடிகள்" என்பதில் சுட்டு, 'அத்தன்மையராகிய' என்னும் பொருளதாய், பற்றின்மையாகிய சிறப்பினைக் குறித்தது. 8. பொ-ரை: தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், எஞ்ஞான்றும் ஒருதன்மையாய் வாழ்தற்குரிய உலகத்தை உடையரோ? 'பிரமன், நெடியோனாகிய மாயோன்' என்னும் இவர்கட்கும் பெரியரோ? தம்மைப் புகழ்ந்து பாடும் புரக்கப்படுவாரையும் உடையரோ? தம்மையே துணையாக அறிந்து பற்றினவர்கட்கு நலம் செய்வரோ? 'காடே அரங்காக எட்டுக் கைகளினாலும் குறிப்புணர்த்தி, தாளத்தொடு பொருந்த ஆடுவார்' எனச் சிறப்பித்துச் சொல்லப்படுபவரோ? சொல்லுமின்.
|