339. | படிசெய் நீர்மையிற் பத்தர் காள்பணிந் | | தேத்தி னேன்பணி யீரருள் | | வடியி லான்திரு நாவ லூரன் | | வனப்பகை யப்பன் வன்றொண்டன் | | செடிய னாகிலுந் தீய னாகிலுந் | | தம்மை யேமனஞ் சிந்திக்கும் | | அடிய னூரனை யாள்வ ரோநமக் | | கடிக ளாகிய வடிகளே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: அடியவர்களே, அடியவர்க்கு அடியராவர் செய்யும் செயல்களைப் படியெடுக்கும் தன்மையில், திருத்தம் இல்லாதவனும், திருநாவலூரில் தோன்றியவனும், வனப்பகைக்கு தந்தையும் ஆகிய வன்றொண்டனேன் உங்களை வணங்கித் துதித்தேன்; கீழ்மையை உடையவனாயினும், கொடியவனாயினும், தம்மையே எப்பொழுதும் மனத்தில் நினைக்கின்ற அடியவனாகிய நம்பியாரூரனை, நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் கைவிடாது ஆளுதல் செய்வரோ? அவரது திருவருள் இருந்தவாற்றைப் பணித் தருளுங்கள். கு-ரை: "படிசெய் நீர்மையிற் பணிந் தேத்தினேன்" என்றதை, ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள் ஞானத் தால்தொழு வேன்உனை நானலேன் ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு ஞானத் தாய்உனை நானுந் தொழுவனே.
(தி. 5 ப. 91 பா. 3) என்ற நாவுக்கரசர் திருமொழியொடு வைத்துக் காண்க. 'வடிவிலான்' என்பது பாடம் அன்று. "தம்மை ஆள்வரோ" என்று வினாவியதும், ஏனையபோல ஆளுதலையே குறித்துநிற்றலின், 'தம்வழி நின்று, தமது பாடலைப் பாடுவாரையும் ஆள்வர்' எனத் திருக்கடைக் காப்பு அருளியதாயிற்று.
|