34. திருப்புகலூர் பதிக வரலாறு: தம்பிரான்தோழர், பரவைநாச்சியார் பங்குனி உத்திரத் திருநாளில் செய்யும் தானதருமங்களுக்குப் பொருள் பெற எண்ணித் திருவாரூரிலிருந்து திருப்புகலூர் சென்று தொழுது கோயிலின் முன்புறம் செங்கற்களைத் தலைக்கு உயரமாக வைத்து இறையருளால் துயின்றார். துயிலெழுந்தபோது செங்கற்கள் பொன்னாகியிருப்பதைக் கண்டு இறையருளை எண்ணி வியந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. யர். புரா. 50, 51) குறிப்பு: இத் திருப்பதிகம், இறைவர் தம்மையே பாடும் புலவர்க்கு இம்மை நலத்தையும் தருதலைக் கண்கூடாகக் கண்ட வியப்பின் மிகுதியால், புலவர்கட்கு அறிவுறுத்து அருளிச்செய்தது. பண்: கொல்லி பதிக எண்: 34 திருச்சிற்றம்பலம் 340. | தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ் | | சார்கி னுந்தொண்டர் தருகிலாப் | | பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை | | புகலூர் பாடுமின் புலவீர்காள் | | இம்மை யேதருஞ் சோறுங் கூறையும் | | ஏத்த லாம்இடர் கெடலுமாம் | | அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் | | கியாதும் ஐயுற வில்லையே. | | 1 |
1. பொ-ரை: புலவர்காள், எம் தந்தையாகிய சிவபிரான், தன்னையே பாடுவார்க்கு இம்மையிற்றானே நல்ல உண்டியும், ஆடையும், பிறவும் தந்து புரப்பான்; அதனால், புகழும் மிகும்; துன்பங் கெடுதலும் உண்டாம், இவையன்றி இவ்வுடம்பு நீங்கிய நிலையிற்றானே சிவலோகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறவைத் தருங்காரணம் யாதும் அறுதியாக இல்லை; ஆதலின், தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழ்ந்து, தமக்கு விருப்பமாயவற்றையே சொல்லி, அதன் மேலும் தம்மையே துணையாகச் சார்ந்து நிற்பினும், அங்ஙனம்
|