பக்கம் எண் :

702
 

சார்ந்தவர்க்கு ஒன்றுந் தருங்குணம் இல்லாத பொய்ம்மையை ஆளுதலையுடைய மக்களைப் பாடுதலை அறவே விடுத்து, அவனது திருப்புகலூரைப் பாடுமின்கள்.

கு-ரை: வேண்டும் சொற்களை வருவித்து, 'தமக்குத் தொண்டராய்த் தம்மையே புகழ்ந்து, தமக்கு இச்சையே பேசினும், தம்மையே சார்கினும்' எனக் கூட்டியுரைக்க. தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழந்து இச்சை பேசுதலும், சார்தலும் ஈயாதாரையும் ஈயப்பண்ணும் தன்மையுடையன என அவற்றது சிறப்புணர்த்தி நிற்றலின், ''பேசினும் சார்கினும்'' என்னும் உம்மைகள் சிறப்பும்மைகள். 'சார்வினும்' என்பது பாடம் அன்று.

பொய்ம்மையாவது, உவகையுடையார்போல இனிய முகமும், இனிய சொல்லுங் காட்டிப் பிறிதோரு காரணத்தின்மேல் இட்டு யாதுந் தாராதொழிதல். ஓரோவழிச் சிறிது தருவர+B250ாயினும, அது மானமுடைய புலவர்க்கு யாதும் தாராதொழிதலினும் இளிவரவே பயத்தலின், அதனையும் தாராமையாகவே வைத்து, ''தருகிலாப் பொய்ம்மையாளர்'' என்று அருளினார். இதனை, இளவெளிமான், பெருஞ்சித்திரனார் இவரிடை நிகழ்ந்த நிகழ்ச்சி பற்றியும் உணர்ந்து கொள்க.

புலவர்தாம், செஞ்ஞாயிற்றுச் செலவம், அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், வளிதிரிதரு திசையும், வறிது நிலைஇய காயமும் என்றிவைகளைச் சென்றளந்து அறிந்தோர் போல அவற்றின் இயல்புகளையும் அறுதியிட்டுரைக்கும் பேரறிவானே (புறம்-30), தேயம் இடையிட்டும் காலம் இடையிட்டும் உள்ள பொருள்களையும் அறிந்து (குறள் - 393 உரை), வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம் உள்ளியது முடிக்கும் (புறம்,206) பெருமக்கள் என்றும், அவராற் பாடப்பெற்றொர், விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப (புறம்-27) என்றும் அறிந்து கொடுத்தலைச் செய்யாராயினும், வேற்றுத் தேயத்தராதல் காரணமாக, கேட்டல் மாத்திரையல்லது, யாவதும் காண்டல் இல்லாது யாண்டு பல கழிய (புறம்-216), செல்வக்காலை நிற்பினும், அல்லற்காலத்து நில்லாது வந்து (புறம் - 215) உடனுயிர் துறக்கும் உற்ற நண்பினராதற்கு உரியர் என்று கருதியாயினும் தருதலைச் செய்யார் என்பார், ''தருகிலாப் பொய்ம்மையாளர்'' என்று அருளினார்.

தலைவரது ஊர் முதலியவற்றைப் பாடுதலும் தலைவரைப் பாடுதலேயாமாகலின், ''எந்தை புகலூர் பாடுமின்'' என்று அருளிச்