341. | மிடுக்கி லாதானை வீம னேவிறல் | | விசய னேவில்லுக் கிவனென்று | | கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று | | கூறி னுங்கொடுப் பாரிலை |
செய்தார்; இதனை, ''வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன் - குன்றம் பாடின கொல்லோ'' (புறம் - 131) என்றாற் போல்வனவற்றினுங் காண்க. இதனானே திருப்பதிகங்கள் இறைவரது தலங்கள் முதலியவற்றைப் பெரிதும் புகழ்தற் காரணமும் அறியப்படும். 'புலவர்கள்' என்பதில், 'கள்' ஒருபொருட் பன்மொழியாய் வந்த விகுதிமேல் விகுதியாதலின், 'புலவீர்காள்' என ஈரிடத்தும் விளியேற்றலும் பொருந்துவதாயிற்று. 'அம்மையிற்றான்' என்பதனை விலக்கலின், ''இம்மையே'' என்னும் ஏகாரம், பிரிநிலை. ''சோறும், கூறையும்'' என்றது, அவற்றோடு உடனெண்ணத் தக்க பிறவற்றையும் தழுவ நின்ற குறிப்பினதாதல் அறிக. ஏத்தல், ஏத்தப்படுதல், ஏத்தலும் என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. ''அம்மை'' என்றது அம்மைக்கு உரியராம் நிலையினை. ஆண்டுப் பிறிதொரு பிறப்பு எடுத்தலினின்றும் பிரித்தலின், ''அம்மையே'' என்னும் ஏகாரமும், பிரிநிலையே. ''ஆள்வது'' என்னும் செயப்படு பொருட்பெயர், அதனைத் தெரிவிக்குங் கருவியாகிய சொல்லுதற்கு ஆயிற்று. அவ்விடத்து நிற்கும் நான்காவது. பகைப் பொருட்டு. 'ஐயுறுதல்' என்னும் காரியமும், தன் காரணத்தின்மேல் நின்றது. ஏகாரம், தேற்றம். ஈத்துவக்கும் இன்பம் அறியாது தம் உடைமைகளை வைத்திழக்கும் வன்கண்ணரன்றி (குறள்-228), இரவலரைக் கண்டாற் கரவாது உவந்தீவார் (குறள்-1061) உலகத்து அரியராகலானும், ஒரோ வழி அன்னர் உளராய்க் கிடைப்பினும், அவர்தாம் தருவனநிலையில்லாத இன்பத்தைச் தரும் சோறுங் கூறையும் போல்வன வல்லது, நிலையுடைய வீடு பேறாகாமையானும் அவரைப் பாடாதே இறைவரைப் பாடுமின் என்பார், ''சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே'' என அதனை ஐயமறுத் துணர்த்தியருளினார்; இதனானே, வருகின்ற பாடல்கள் எல்லாவற்றுள்ளும் இஃதொன்றனையே வலியுறுத்தருளிச் செய்தற் காரணமும் உணர்ந்துகொள்ளப் படும். 2. பொ-ரை: புலவர்காள், வலியும் வீரமும் இல்லாதவனை, ''இவன் மல்லுக்கு வீமனே போல்வான், வில்லுக்கு வெற்றியையுடைய அருச்சுனனே போல்வான்' என்றும், கொடுத்தற்குணம் இல்லாதவனை,
|