பக்கம் எண் :

715
 
352.பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும்

பண்டை யாரலர் பெண்டிரும்

நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும்

நினைப்பொ ழிமட நெஞ்சமே

மதியஞ்சேர்சடைக் கங்கை யானிடம்

மகிழும் மல்லிகை செண்பகம்

புதிய பூமலர்ந் தெல்லி நாறும்

புறம்ப யந்தொழப் போதுமே.

2


353.புறந்தி ரைந்து நரம்பெழுந்து

நரைத்து நீஉரை யாற்றளர்ந்

தறம்பு ரிந்துநி னைப்ப தாண்மை

யரிது காணிஃ தறிதியேல்



வானவர்கள் வந்த அன்று செவ்வி வாயாமையின், இரவெல்லாங் காத்து நின்றனர் என்க. ''தேவர்கள்'' என்ற இடத்து, 'ஆக' என்பது வருவிக்க. ஈண்டு, 'தேவர்கள்' என்றது, உயர்ந்த தேவர்களை. ''வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் - தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டி'' என்ற திருவாசகத்தைக் காண்க. (தி.8 திருச்சதகம் 16.)

2. பொ-ரை: அறியாமையுடைய மனமே, நாம் வாழ்கின்ற ஊரும், மணந்த மனைவியரும், பெற்ற மக்களும், பிற சுற்றத்தாரும், தேடிய பொருளும், அப்பொருளால் மனையில் வாழும் இவ் வாழ்க்கையும் எல்லாம் பண்டு தொட்ட தொடர்பினரல்லர்; அதனால், என்றும் உடன் தொடர்ந்தும் வாரார். ஆதலின், அவர்களைப் பற்றிக் கவலுதல் ஒழி; இனி நாம், சந்திரன் சேர்ந்த சடையிடத்துக் கங்கையை அணிந்தவன் தன் இடமாக மகிழும், மல்லிகைக் கொடியும் சண்பக மரமும் புதிய பூக்களை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; புறப்படு.

கு-ரை: திணைவிராய் எண்ணப்பட்டன, பன்மையால் உயர்திணை முடிபு கொண்டன. ''நிதியில்'' என்றது, உடம்பொடு புணர்த்தலாகலின், இவ்வாறுரைக்கப்பட்டது.

3. பொ-ரை: மனமே, தோல் திரைந்து, நரம்புகள் வெளித் தோன்றி, வாய் குழறும் நிலை வந்த பின்பு அறத்தைச் செய்ய