பக்கம் எண் :

716
 
திறம்பி யாதெழு நெஞ்ச மேசிறு

காலை நாமுறு வாணியம்

புறம்ப யத்துறை பூத நாதன்

புறம்ப யந்தொழப் போதுமே.

3

 

354.குற்றொ ருவ்வரைக் கூறை கொண்டு

கொலைகள் சூழ்ந்த களவெலாம்

செற்றொ ருவ்வரைச் செய்த தீமைகள்

இம்மை யேவருந்திண்ணமே

மற்றொரு ருவ்வரைப் பற்றி லேன்மற

வாதெ ழுமட நெஞ்சமே

புற்ற ரவ்வுடைப் பெற்ற மேறி

புறம்ப யந்தொழப் போதுமே.

4



நினைப்பது பயனில்லாததாம்; இதனை நீ அறிவையாயின், நாம் இளமையிலே செய்து ஊதியம் பெறுதற்குரிய வாணிகம் இதுவேயாக, புறத்திலே அச்சத்தொடு சூழும் பூதங்களுக்குத் தலைவனாகிய இறைவனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; என்னைப் பிறழ்வியாது, விரையப் புறப்படு.

கு-ரை: முதலில் 'புறம்', ஆகுபெயர்,. செய்தெனெச்சங்கள் எண்ணின்கண் வந்தன. 'நீ அறிதியேல்' எனக் கூட்டுக. ''உரையால்'' என்றதில் ஆல், அசைநிலை. ''புரிந்து' என்றதனை, ''புரிய'' எனத் திரிக்க. ஆண்மை, ஆளுதல் - பயன்கொள்ளுதல் - தன்மை. அரிது, இல்லாதது. 'திறம்புவியாது' என்பது விகாரமாயிற்று. ''வாணியம்'' என்பதன்பின், 'ஆக' என்பது வருவிக்க. 'வாணிகம்' என்பது வாணியம் என மருவிற்று. வாணிபம் என்பதும் பாடம். இத்திருப்பாடலில், 'புறம்பயம்' என்பது, 'மடக்கு' என்னும் அணிநயம்பட அருளப்பட்டது.

4. பொ-ரை: அறியாமையுடைய மனமே, பொருளைப் பறித்தல் வேண்டி அஃது உடைய ஒருவரைக் கருவியாற் குற்றி, அவர் உடையைப் பறித்து, மேலும் கொலைச் செயல்களைச் செய்யத் துணிந்த களவினால் ஆகிய பாவங்களும், முறையில் நிற்கும் ஒருவரை முறையின்றிப் பகைத்து, அப்பகை காரணமாக அவர்க்குத் தீங்கிழைத்த பாவங்களும் மறுமை வருங்காறும் நீட்டியாது இம்மையே வந்து