355. | கள்ளி நீசெய்த தீமை யுள்ளன | | பாவ மும்பறை யும்படி | | தெள்ளி தாஎழு நெஞ்ச மேசெங்கண் | | சேவு டைச்சிவ லோகனூர் | | துள்ளி வெள்ளிள வாளை பாய்வயல் | | தோன்று தாமரைப் பூக்கள்மேல் | | புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் | | புறம்ப யந்தொழப் போதுமே. | | 5 |
வருத்தும்; இது திண்ணம்; ஆதலின், அவைபோல்வன நிகழாதிருத்தற்கு உன்னையன்றிப் பிறர் ஒருவரையும் நான் துணையாகப் பற்றாது உன்னையே பற்றினேன்; புற்றில் வாழும் பாம்புகளை அணிகளாக உடைய, இடப வாகனனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; அவனை நினைந்து புறப்படு. கு-ரை: 'குறு' என்பது அடியான செய்தெனெச்சம், 'குற்று' என வருதல் பண்டைய வழக்கு. குற்று என்பது அடியாக, 'குற்றி' என வருதல் பிற்கால வழக்கு. குத்துதல் கையாலும், குற்றுதல் கருவியாலும் நிகழ்வன. முன்னையது புண்செய்யாது; பின்னையது புண் செய்யும். கொல்லுதல் ஒன்றாயினும், அஃது உண்டாகச் செய்யும் செயல்கள் பல உளவாகலின், ''கொலைகள்'' என்றார். சூழ்தல், எண்ணித் துணிதலைக் குறித்தது. எச்செயலுக்கும் மனமே முதலாதலின், அல்லதை ஒழித்தற்கும், நல்லதைச் செய்தற்கும் அதனையே துணையாகப் பற்றினார் என்க. 5. பொ-ரை: மனமே, நீ வஞ்சித்துச் செய்த தீமையால் உளவாகிய பாவமும் நீங்கும்படி, இடபத்தையுடைய சிவலோகனது ஊராகிய, வெள்ளிய இளமையான வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற வயல்களில் மலர்கின்ற தாமரைப் பூக்களின் மேல், புள்ளிகளையுடைய நண்டுகள் பள்ளி கொள்கின்ற திருப்புறம்பயத்தை வணங்கத் தெளிவுடையையாய்ப் புறப்படு. கு-ரை: 'உள், எள்' என்பவை அடியாக, 'உள்ளி, எள்ளி' என்னும் வினையெச்சங்கள் வருதல்போல, 'கள்' என்பது அடியாக, 'கள்ளி' என்னும் வினையெச்சம் வருதலை, இத் திருப்பாடலிற் காண்க. 'கட்டு' என வருவது, 'களைந்து' எனப் பொருள்தரும். ''தெள்ளிது'' என்றதில். து, பண்புப் பெயர் விகுதி. 'து, று' என்பன பண்புப் பெயர்
|