பக்கம் எண் :

718
 
356.படையெ லாம்பக டாரஆளிலும்

பௌவஞ் சூழ்ந்தர சாளிலும்

கடையெ லாம்பிணைத் தேரை வால்கவ

லாதெ ழுமட நெஞ்சமே

மடையெ லாங்கழு நீர்ம லர்ந்து

மருங்கெ லாங்கரும் பாடத்தேன்

புடையெ லாமணம் நாறு சோலைப்

றம்ப யந்தொழப் போதுமே.

6



விகுதியாதல் பிற்கால முறைமை. அப்பண்புப் பெயர் பண்பியின் மேல் நின்றது. ஈண்டுக் குறித்த பாவம் தமக்கு உளதாகத் துணிந்திலராயினும், 'உளதாயிருப்பின், அவையும் நீங்குமாறு வணங்குவோம்' என்று அருளினார், அஃது ஒன்றே அதற்குப் பயனாகாமையின்.

6. பொ-ரை: அறியாமை பொருந்திய மனமே, யானைகள் நிரம்பியிருக்க, பல படைகளையும் ஏவல்கொண்டு வெற்றியைப் பெறினும். அவ்வெற்றியாலே கடல்சூழ்ந்த நிலம் முழுவதையும் ஆளினும், முடிவில் எல்லாம், தேரையோடு ஒட்டியுள்ள வால்போல ஆகிவிடும்; ஆதலால், நீர்மடைகளில் எல்லாம் கழுநீர்ப் பூக்கள் மலர்தலாலும், பல இடங்களிலும் கரும்பை ஆலையில் இட்டுப் பிழிதலாலும், எல்லாப் பக்கங்களிலும் தேனின் மணம் வீசுகின்ற சோலைகளையுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; அவைகளைப் பற்றிக் கவலைகொள்ளாது புறப்படு.

கு-ரை: 'படைகளை ஆளுதல்' என்றது, அவ்வாற்றால் வெற்றி பெறுதலைக் குறித்தது. 'சூழ்ந்த' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. 'அரசு' அதனையுடைய நிலத்திற்கு ஆயிற்று. 'தேரையொடு பிணைதலை உடைய வால்' என்க. தேரை பிறந்த பொழுது அதனோடு உடன் தோன்றிய வால் ஒரு கால எல்லையில் அதனைவிட்டு ஒழிதல் போல, படைகளும், நாடு முதலியனவும் ஒரு கால எல்லையில் விட்டொழிவனவன்றி, உடன்வருவது யாதும் இல்லை என்றதாம். ''மலர்ந்து' என்னும் எச்சம், எண்ணின்கண் வந்தது. ''ஆட'' என்ற எச்சம், காரணப் பொருட்டு. 'தேன்' என்பது, கருப்பஞ்சாற்றையும் குறிக்கும். 'மணம் நாறு புறம்பயம், சோலைப் புறம்பயம்' எனத் தனித்தனி இயையும். ''சோலைப் புறம்பயம்'' என்றதும், பிறிதொரு மணம் வீசுதலைக் குறித்தவாறு.