357. | முன்னைச் செய்வினை இம்மை யில்வந்து | | மூடு மாதலின் முன்னமே | | என்னை நீதியக் காதெ ழும்மட | | நெஞ்ச மேஎந்தை தந்தையூர் | | அன்னச் சேவலோ டூடிப் பேடைகள் | | கூடிச் சேரு மணிபொழில் | | புன்னைக் கன்னி களக்கரும்பு | | புறம்ப யம்தொழப் போதுமே. | | 7 |
358. | மலமெ லாமறும் இம்மை யேமறு | | மைக்கும் வல்வினை சார்கிலா | | சலமெ லாமொழி நெஞ்ச மேஎங்கள் | | சங்க ரன்வந்து தங்குமூர் |
7. பொ-ரை: அறியாமையையுடைய மனமே, ஒருவர் முற்பிறப்பிற் செய்த வினை, இப்பிறப்பில் வந்து அவரைச் சூழ்ந்து கொள்ளும் என்பது உண்மையாதலின், அங்ஙனம் வந்து சூழ்வதற்கு முன்பே, எமக்கும் பிறர்க்கும் தந்தையாகிய சிவபெருமானது ஊராகிய அன்னப் பேடைகள், அவற்றின் சேவல்களோடு முன்னே ஊடல் கொண்டு, பின்பு கூடலைச் செய்து வாழ்கின்ற அழகிய சோலைகளில் உள்ள இளைய புன்னை மரங்கள் கழிக்கரையில் நின்று மணம் வீசுகின்ற திருப்புறம் பயத்தை வணங்கச் செல்வோம்; என்னை நீ கலங்கச் செய்யாது புறப்படு. கு-ரை: 'கன்னிப் புன்னை' என மாற்றியுரைக்க. பெண்மக்களுள் மணமாகாத இளம் பருவத்தாளைக் குறிப்பதாகிய, 'கன்னி' என்னும் சொல்லால், புன்னை முதலியவற்றைக் குறித்தல் உயர்வு பற்றிய பான்மை வழக்கு. ''கழி'' என்றது, கழிபோல நீர் வற்றாது ஓடும் வாய்க்கால்களை. 'புன்னைக் கன்னிகழக்கணாறும்' என்று ஒரு பாடம் காணப்படுகின்றது. 8. பொ-ரை: மனமே, இப்பிறப்பிற்றானே மலங்கள் யாவும் நீங்கும்; மறு பிறப்பிற்கு வாயிலாக வலிய வினைகள் வந்து அடைய மாட்டா; ஆதலின், நீ துன்பத்தை விட்டொழி; எங்கள் சங்கரன் வந்து தங்கியிருக்கும் ஊராகிய, காவிரிநதி என்கின்ற நங்கை முழுக ஓடுகின்ற, கடலிற் காணப்படுவது போல நாவாய்கள் மிகுந்து காணப்படுகின்ற
|