பக்கம் எண் :

720
 
கலமெ லாங்கடல் மண்டு காவிரி

நங்கை யாடிய கங்கைநீர்

புலமெ லாமண்டிப் பொன்வி ளைக்கும்

புறம்ப யந்தொழப் போதுமே.

8


359.பண்ட ரீயன செய்த தீமையும்

பாவ மும்பறை யும்படி

கண்ட ரீயன கேட்டி யேற்கவ

லாதெ ழுமட நெஞ்சமே

தொண்ட ரீயன பாடித் துள்ளிநின்

றாடி வானவர் தாந்தொழும்

புண்ட ரீகம லரும் பொய்கைப்

புறம்ப யந்தொழப் போதுமே.

9



கங்கைநதியின் நீர் போலும் நீர், வயல்களிலெல்லாம் மிகப்பாய்ந்து பொன் போலும் செந்நெற்களை விளைவிக்கின்ற திருப்புறம் பயத்தை வணங்கச் செல்வோம்.

கு-ரை: 'காவிரி நங்கை ஆடிய, கலமெலாம் கடல் மண்டு கங்கைநீர்' எனக் கூட்டுக. காவிரி நதியில் கரைகடந்து பெருகும் வெள்ளத்தை அந்நதியாகிய நங்கை முழுகிய நீராக அணிந்துரைத்தார். ''கங்கை'' என்றது, ஆகுபெயராய் அதன் நீரை உணர்த்திற்று. ''பொன்'' உவமையாகுபெயர்.

9. பொ-ரை: அறியாமையையுடைய மனமே, முற்பிறப்பில் நீக்குதற்கு அரியனவாகச் செய்த தீய செயல்களின் பழக்கமும், அச்செயல்களால் வந்த பாவமும் விரைய நீங்கும்படி நான் கண்ட அரிய வழிகளை நீ கேட்டு நடப்பதாயின், தேவர்கள் அரிய பல தொண்டுகளைச் செய்து பாடியும், குதித்து நின்று ஆடியும் தொழுகின்ற, தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகளை யுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; கவலையுறாமல் புறப்படு.

கு-ரை: 'பண்டரியன' என்றாற்போல நீட்டல் இன்றி ஓதுவன பாடம் அல்ல என்பது, ''புண்டரீகம்'' என்றதனானே விளங்கும். 'கண்ட' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ''தொண்டு அரியன'' என்றவிடத்து. 'செய்து' என்பது வருவிக்க.