பக்கம் எண் :

721
 
360.துஞ்சி யும்பிறந் துஞ்சி றந்துந்

துயக்க றாத மயக்கிவை

அஞ்சி யூரன் திருப்பு றம்பயத்

தப்ப னைத்தமிழ்ச் சீரினால்

நெஞ்சி னாலே புறம்ப யந்தொழு

துய்து மென்று நினைத்தன

வஞ்சி யாதுரை செய்ய வல்லவர்

வல்ல வானுல காள்வரே.

10

 

திருச்சிற்றம்பலம்


10. பொ-ரை: இறந்தும், பின்பு பிறந்தும், அதன் பின் வளர்ந்தும் சுழலுதல் நீங்காத மயக்கத் தொழிலாகிய இவைகளுக்கு அஞ்சி, நம்பியாரூரன், 'திருப்புறம்பயத்தை வணங்கி உய்வோம்' என்று நெஞ்சினாலே நினைத்து, ஆங்கிருக்கின்ற தன் தந்தையைத் தமிழ்ச் சீர்களால் பாடிய இப்பாடல்களைக் கரவில்லாது பாட வல்லவர்கள், அவைகளை நீக்கவல்ல வானுலகத்தை ஆள்வார்கள்.

கு-ரை: துயக்கு - கலக்கம்; அஃது அதனைச் செய்கின்ற சுழற்சியைக் குறித்தது. மயக்கமாவது, துன்பத்தை இன்பம் எனக் கருதுதல். வஞ்சித்தலாவது, இறத்தல் முதலியவற்றிற்கு அஞ்சாது, அஞ்சினார்போலக் காட்டுதல் மயக்கினை நீக்கவல்ல வானுலகு, சிவலோகம்.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

அங்க மோதியோர் ஆறை மேற்றளி

யென்றெ டுத்தமர் காதலிற்

பொங்கும் இன்தமி ழால் விரும்பு

புறம்ப யம்தொழப் போதுமென்று

எங்கும் மன்னிய இன்னி சைப்பதி

கம்பு னைந்துடன் எய்தினார்

திங்கள் சூடிய செல்வர் மேவு

திருப்பு றம்பயம் சேரவே

96

-தி. 12 சேக்கிழார்