36. திருப்பைஞ்ஞீலி பதிக வரலாறு: தம்பிரான் தோழர் திருப்பாச்சிலாச்சிராமத்தில் பெருமானைத் தொழுது பொருள் பெறறுச் சின்னாள் தங்கி அருகிலுள்ள பதிகளை வணங்கிய பின்னர் காவிரியின் இரு மருங்கிலுமுள்ள தலங்களை வணங்கிக்கொண்டு திருப்பைஞ்ஞீலி சென்று, திருக்கோபுரம் இறைஞ்சி வலங்கொண்டு கங்காளமூர்த்தியைத் தரிசித்து, பெருமான் பலிக்கு எழுந்தருளும் திருவடிவைக்கண்ட மகளிர் மையல் கொண்டு வினவிய கூற்றாக அமைத்துப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். 84) குறிப்பு: இத் திருப்பதிகம், இறைவர் பிச்சைக்கோலம் உடையவராய்ப் பிச்சைக்குச் சென்றபொழுது, அவரது பேரழகினால் கவரப்பட்டுக் காதல் மீக்கூர்ந்த மகளிர் அவரைத் தாம் தீண்டுதற்கு அஞ்சுதலைக் குறிப்பிற் கூறியவாறாக அருளிச்செய்தது. மகளிர் அஞ்சுதற்குக் காரண மாயினவை, பிறரைத் தீங்குசெய்யும் குறிப்பினவாகாது, இறைவரது பெருமிதத்தையே குறித்தலின், அவ்வச்சமும், காதல் மிகுதிக்கே காரணமாயிற்றென உணர்க. பண்: கொல்லி பதிக எண்: 36 திருச்சிற்றம்பலம் 361. | காரு லாவிய நஞ்சை யுண்டிருள் | | கண்டர் வெண்டலை யோடுகொண் | | டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி | | ஓரி டத்திலே கொள்ளும் நீர் | | பாரெ லாம்பணிந் தும்மை யேபர | | விப்ப ணியும்பைஞ் ஞீலியீர் | | ஆர மாவது நாக மோசொலும் | | ஆர ணீய விடங்கரே. | | 1 |
1. பொ-ரை: கருமைநிறம் பொருந்திய நஞ்சினை உண்டமையால் இருண்ட கண்டத்தினையுடையவரே, நிலவுலகமெல்லாம் உம்மையே வணங்கித் துதித்துத் தொண்டுபுரியும் பெருமையுடைய,
|